Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒழுங்கா டிரஸ் போடு அப்புறம் வந்து பேசு: கொதித்தெழுந்த கஸ்தூரி

Webdunia
வெள்ளி, 23 நவம்பர் 2018 (12:33 IST)
சென்னையில் தனியார் கல்லூரியில் நடைபெற்ற பாலியல் அத்துமீறல் குறித்து நடிகை கஸ்தூரி அதிரடியாக டிவீட் போட்டுள்ளார்.
சென்னை காட்டாங்கொளத்தூரில் உள்ள பிரபல கல்லூரியில் மாணவி ஒருவர் லிப்டில் சென்றுள்ளார். அந்த லிப்டில் அதே கல்லூரியை சேர்ந்த பணியாளர் ஒருவரும் வந்துள்ளார். லிப்டில் இருவர் மட்டுமே இருந்த நிலையில், அந்த பணியாளர் திடீரென தனது துணியை அவிழ்த்து சில கீழ்த்தரமான வேலைகளை செய்துள்ளான். அதுமட்டுமில்லாமல் அந்த மாணவியின் துணியையும் அவிழ்க்க முயன்றுள்ளான். இதனால் அதிர்ந்துபோன மாணவி கூச்சலிட்டுள்ளார். பயந்துபோன அந்த பணியாளர் லிப்டிலிருந்து இறங்கி தப்பித்துள்ளான்.
இதுகுறித்து அந்த மாணவி ஹாஸ்டல் வார்டனிடம் முறையிட்டபோது அவர் நீ ஒழுங்கா டிரஸ் போடலனா இப்படித் தான் செய்வாங்க என கூறியுள்ளார். இதனால் அந்த மாணவி அதிர்ந்துபோனார். கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் ஒன்றிணைந்து சம்மந்தப்பட்ட பணியாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டத்தில் குதித்துள்ளனர்.
 
இந்நிலையில் இதுகுறித்து நடிகை கஸ்தூரி தனது டிவிட்டர் பக்கத்தில் ஒருத்தன் லிப்டல பொண்ணுக்கு பாலியல் தொல்லை குடுத்திருக்கான். அவன கண்டிக்காம அந்த வார்டன் ஒழுங்கா டிரஸ் போடலனா கை வைக்க தான் செய்வாங்கன்னு சொல்லி இருக்காங்க.. இது மட்டமான செயல் என ஆவேசமாக கூறியிருக்கிறார்.
 

தொடர்புடைய செய்திகள்

‘நான்கு தலைமுறை வாழ்ந்த மாஞ்சோலை எஸ்டேட்டை விட்டு எங்கே போவது?’ - தொழிலாளர்கள் சொல்வது என்ன?

நான் இறந்துவிட்டேன்.. என் தொகுதி காலியாகிவிட்டது: லால்குடி எம்.எல்.ஏ அதிர்ச்சி பதிவு..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு..! பின் வாங்கிய அதிமுக..! காரணம் என்ன.?

விஜய்யை அடுத்து அஜித்தும் அரசியல் கட்சி தொடங்குவார்: ஈவிகேஎஸ் இளங்கோவன்

சென்னை விமான நிலையத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்.. கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள்..!

அடுத்த கட்டுரையில்