சமீபத்தில் சபரிமலைக்கு சென்ற மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்னனை கேரள போலீஸார் வருத்தெடுத்தனர். இதனால் அவர் கடும் அதிருப்திக்கு ஆளானார். இதனை எதிர்த்து இன்று நாகர்கோவிலில் போராட்டம் நடைபெற்றது.
இதற்கிடையே பொன்னார் கஜா புயலால் பாதிக்கப்பட்ட வேதாரண்யம் பகுதிகளை பார்வையிடுவதற்காக காரில் சென்றார். அப்போது மன்னார்குடியில் மின்சாரம் இல்லாததைக் கண்டித்து மக்கள் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தனர். அவர்கள் பொன்னாரின் காரை மறித்தனர்.
கரண்ட் கனெக்ஷனை கொடுக்க வழி செய்துவிட்டு இந்த இடத்தை விட்டு நகருங்கள் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பொதுமக்களை சமாதானப்படுத்திய பொன். ராதாகிருஷ்ணன் மின்சாரம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என் கூறினார். இதையடுத்து மக்கள் சாலை மறியலை கைவிட்டனர். பின்னர் பொன்னார் காரில் புறப்பட்டு சென்றார்.