Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கரூர் மாணவி தற்கொலை விவகாரம்: பள்ளி நிர்வாகம் விளக்கம்!

Webdunia
திங்கள், 22 நவம்பர் 2021 (08:06 IST)
கரூரில் பிளஸ்டூ மாணவி ஒருவர் சமீபத்தில் தற்கொலை செய்து கொண்ட நிலையில் இதுகுறித்து பள்ளி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
கரூரில் பிளஸ்டூ மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கிய நிலையில் இதுகுறித்து பள்ளி நிர்வாகம் மாணவர்கள் பெற்றோர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது
 
அதில் மாணவியின் தற்கொலையில் ஆசிரியர்களுக்கும், பள்ளி நிர்வாகத்திற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்றும்  காவல்துறை விசாரணைக்கு பின் கண்டுபிடிக்கப்படும் குற்றவாளிக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதில் பள்ளி நிர்வாகம் உறுதியாக இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது
 
மேலும் சமூக வலைதளங்களில் பள்ளியை பற்றி வரும் கருத்துக்களுக்கு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் செவி சாய்க்க வேண்டாம் என்றும் அந்த விளக்க அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீனவர்கள் பிரச்சினை! கச்சத்தீவை மீட்பதுதான் ஒரே வழி! - புதிய நடவடிக்கையை கையில் எடுக்கும் மு.க.ஸ்டாலின்?

நித்யானந்தா உயிருடன் தான் இருக்கிறார்.. வதந்தியை நம்ப வேண்டாம்.. கைலாசா நாடு அறிவிப்பு..!

இ-பாஸ் நடைமுறைக்கு எதிர்ப்பு.. இன்று நீலகிரியில் கடையடைப்பு போராட்டம்..!

பிரதமர் மோடி வருகை எதிரொலி: ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிக்க தடை..!

தமிழகத்தில் மாதந்தோறும் மின் கணக்கீடு எப்போது? முக்கிய தகவல்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments