Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கட்சி பேர சொல்லி வர எவனையும் நம்பாதீங்க.. சொந்த நிர்வாகிகளை நாரடித்த கருணாஸ்!

Webdunia
செவ்வாய், 3 டிசம்பர் 2019 (12:55 IST)
முக்குலத்தோர் புலிப்படை கட்சி நிர்வாகிகள் யாரையும் நம்பாதீர்கள் என கருணாஸ் கூறி இருப்பது கட்சி நிர்வாகிகளுக்கு மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
ராமநாதபுரத்தில் நடைபெற்ற குறை தீர்ப்பு கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரோடு திருவாடானை தொகுதி எம்.எல்.ஏவும்,  முக்குலத்தோர் புலிப்படை கட்சி தலைவருமான கருணாஸ் கலந்துக்கொண்டார். இந்த கூட்டத்தில் தனது கட்சி நிர்வாகிகள் குறித்து அவர் பேசியது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. கருணாஸ் பேசியதாவது... 
 
நான் நடத்தி வரும் முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் நிர்வாகிகள் அரசிடம் உதவிகள் பெற்றுத்தருவதாக வந்தால் மக்கள் அவர்களை நம்ப வேண்டாம். என் தொகுதி மக்களுக்கு ஏதாவது குறைகள் இருந்தால், அதை நேரடியாக என்னிடம் தெரியப்படுத்துங்கள். 
குறைகள் தொடர்பான மனுக்களை என்னிடமே நேரடியாக வழங்கலாம். நான் இல்லை என்றால் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திலோ அல்லது அரசு அதிகாரிகளிடமோ கொடுங்கள் என கூறியுள்ளார். 
 
கருணாஸ் தனது நிர்வாகிகளை நம்பவேண்டாம் என கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தினாலும், அவர் ஏன் இவ்வாறு கூறினார் என்பது புரியாத ஒன்றாக உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டி.. நாளை முதல் முன்பதிவு தொடக்கம்..!

பிரியங்கா காந்தி கன்னம் போல சாலை அமைப்பேன்: பாஜக வேட்பாளர் சர்ச்சை பேச்சு..!

திருமணமாகாதவர்கள் தங்க அனுமதி இல்லை: ஓயோ அதிரடி அறிவிப்பு..!

சிந்துவெளி எழுத்து முறை.. ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் பரிசு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!

டி.என்.பி.எஸ்.சி மூலம் தேர்ந்தெடுக்கப்படவுள்ள ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் எத்தனை பேர்? அன்புமணி கேள்வி

அடுத்த கட்டுரையில்
Show comments