இம்ரான்கானுக்கும் ஸ்டாலினுக்கு தொடர்பு உள்ளது. அதனாலேயே குடியுரிமை திருத்தசட்டத்தை ஸ்டாலின் எதிர்க்கிறார் என பாஜக பிரமுகர் கருநாகராஜன் கருத்து தெரித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
காஷ்மீரின் 370வது சட்டப்பிரிவை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கண்டித்தார். அதேபோல் திமுக தலைவர் மு க ஸ்டாலின் அவர்களும் கண்டித்துள்ளார். தற்போது குடியுரிமை சட்டம் தவறு என்று இம்ரான் கான் கூறியுள்ளா.ர் திமுக தலைவரும் அதையே கூறியுள்ளார். எனவே இம்ரான்கானுக்கும், திமுக தலைவருக்கும் தொடர்பு இருப்பதாக நான் சந்தேகிக்கிறேன் என்று கருநாகராஜன் கூறினார்
காஷ்மீரின் 370 ஆவது சட்டப்பிரிவுக்கு காங்கிரஸ், மாயாவதி கட்சி, அகிலேஷ் யாதவ் கட்சி உள்பட இந்தியாவின் பல கட்சிகள் ஆதரவு கொடுத்தனர். ஆனால் இந்த திட்டத்தை எதிர்த்தது இரண்டே இரண்டு பேர்தான். ஒருவர் இம்ரான்கான் இன்னொருவர் முகஸ்டாலின் என்று அவர் கூறினார்
மேலும் நாளை பாஜக சார்பில் நடத்தவிருக்கும் போராட்டம் திமுக தலைவருக்கு எதிரான போராட்டம் மட்டுமல்ல இந்த சட்டத்தால் இஸ்லாமிய சகோதரர்கள் பயம் கொள்ள தேவை இல்லை என்பதை விளக்கக் கூடிய போராட்டமாகவும் இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார் பாகிஸ்தான் பிரதமருக்கு முக ஸ்டாலினுக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகம் தெரிவித்த கருநாகராஜன் அவர்களுக்கு திமுக கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது