கருணாநிதி - குஷ்பு ஆடியோ? சிண்டு மூட்டும் கராத்தே தியாகராஜன்!

Webdunia
செவ்வாய், 16 ஜூலை 2019 (10:49 IST)
கருணாநிதியை தமிழர் இல்லை என்று நடிகை குஷ்பு கூறியதாகவும் இதற்கு ஆடியோ ஆதாரம் இருப்பதாகவும் கராத்தே தியாகராஜன் தகவல் வெளியிட்டுள்ளார். 
 
நேற்று காமராஜ் பிறந்தநாள் விழா மற்றும் தென் சென்னை காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் அடையாறில் உள்ள கராத்தே தியாகராஜன் இல்லத்தில் நடைபெற்றது. 
 
இந்த ஆலோசனை கூட்டத்தில் தனது ஆதரவாளர்கல் மத்தியில் கராத்தே தியாகராஜன் பேசியது பின்வருமாறு, கே.எஸ்.அழகிரி பொறுப்புக்கு நான் கூடிய விரைவில் வருவேன். அதாவது தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவராக கூடிய விரைவில் நியமிக்கப்படுவேன்.
காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தியே தொடர வேண்டும். காங்கிரஸ் கட்சிக்கு சுயமரியாதை வேண்டும். தன்மானம் வேண்டும். எனவே, வருகின்ற உள்ளாட்சி தேர்தலில் கண்ணியமான கூட்டணி அமைய வேண்டும் என தெரிவித்தார்.
 
இதோடு, மறைந்த கருணாநிதி தமிழர் இல்லை என்று கூறியவர் நடிகை குஷ்பு. அவர் அப்படி கூறிய ஆடியோவும் என்னிடம் உள்ளது என தெரிவித்து திமுகவினை சீண்டி உள்ளார். 

உள்ளாட்சி தேர்தலில் கண்ணியமான கூட்டணி அமைய வேண்டும் என கராத்தே தியாகராஜன் தெரிவித்ததும் திமுகவினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக மெளனமாக இருப்பது ஏன்? தவெக நிர்வாகி கருத்து..!

பாமக நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்.. தவெகவுக்கு நேரில் சென்று அழைப்பு..!

விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி.. தவெக தீர்மானம்..!

எதிர்பார்த்தபடியே SIR படிவம் சமர்பிக்க அவகாசம் நீட்டிப்பு! எத்தனை நாட்கள்?

ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை விட்டுக்கு அழைத்து சென்ற இளைஞர்.. பெற்றோர் சம்மதத்துடன் திருமணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments