2021 ஆம் ஆண்டு நடக்கும் தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெற்று ரஜினிகாந்த் முதல்வர் ஆவார் என கராத்தே தியாகராஜன் கூறியுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய அரசியல் வருகையை கடந்த 2017 ஆம் உறுதி செய்தார். அதன் பின்னர் தனது ரசிகர் மன்றங்களை மக்கள் மன்றங்களாக மாற்றி உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து தனது அரசியல் நிலைபாடு குறித்து எந்த ஒரு தகவலையும் வெளியிடாமல் மெளனம் காத்து வருகிறார்.
இந்த அமைதியின் காரணமாக, அவரது அரசியல் எண்ட்ரி குறித்து கேள்வி எழுப்பியவர்களின் வாயை, அரசியலுக்கு வரப்போவது உறுதி. எல்லாம் தயார் நிலையில் உள்ளது. அம்பு எய்ய வேண்டியது மட்டுமே பாக்கி என கூறி அடைத்துவிட்டார் ரஜினி.
வெளியில் அமைதியாக காணப்பட்டாலும் உள்ளுக்குள் நேரடியாக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட, ரஜினி தயாராகி வருகிறார் எனவும் கூறப்படுகிறது. சமீபத்தில் தர்பார் இசை வெளியீட்டு விழாவின் போதும் என்னை நம்புங்கள் என ரசிகளிடம் கூறினார்.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட கராத்தே தியாகராஜன் ரஜினியின் பிறந்தநாள் விழாவில் கலந்துக்கொண்டு பேசினார். அப்போது அவர் ரஜினிதான் அடுத்த முதலமைச்சராக வருவார். ரஜினி 2021ஆம் ஆண்டு கோட்டையில் கொடியேற்றுவார் என உறுதியாக கூறினார்.
இதற்கு முன்னர், இன்னும் எண்ணி 6 மாதத்தில் நடிகர் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிப்பார். அவர் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவது உறுதி. 2021 ஆம் ஆண்டு நடக்கும் தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெற்று ரஜினிகாந்த் முதல்வர் ஆவார் என தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.