Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெற்று நாயகன் இல்லை, வெற்றி நாயகன்: அதிமுக டுவிட்டிற்கு கனிமொழி பதிலடி!

Webdunia
வெள்ளி, 5 பிப்ரவரி 2021 (21:14 IST)
திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்களை வெற்று நாயகன் என்றும் அறிக்கை நாயகன் என்றும் விமர்சனம் செய்திருந்த அதிமுக டுவிட்டர் பக்கத்திற்கு கனிமொழி பதிலடி கொடுத்துள்ளார்.
 
இன்று விவசாயிகள் கூட்டுறவு கடன் ரத்து என்ற அறிவிப்பு வெளியானதை அடுத்து திமுக எம்பி கனிமொழி தனது டுவிட்டர் பக்கத்தில் ’அறிக்கை நாயகனின் அடுத்த வெற்றி” தளபதி சொல்வதை எல்லாம் செய்ய துடிக்கும் பழனிசாமிக்கு நன்றி. வாழ்த்துக்கள் என்று தெரிவித்திருந்தார்.
 
இந்த டுவிட்டுக்கு பதிலடி கொடுத்த அதிமுகவின் டுவிட்டர் பக்கத்தில் ’அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கும் நீங்கள் சொல்லி கொண்டதாய் நினைத்துக்கொண்டே இருங்கள். ஆனால் செய்வது நாங்களாக மட்டும் தான் இருப்போம்’ என்று கூறப்பட்டிருந்தது. அதுமட்டுமின்றி பின்குறிப்பு என வெற்று நாயகன், அறிக்கை நாயகன் முக ஸ்டாலின் என்ற படத்தை உறுதி செய்த கனிமொழி அவர்களுக்கு நன்றி என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
 
இந்த டுவிட்டுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் கனிமொழியும் ’வெற்று நாயகன் இல்லை அடிக்கல் நாயகனான உங்களை வழிநடத்தும் வெற்றி நாயகன். கனவு காண்பதற்காக உரிமை எல்லோருக்கும் உண்டு. விடியும்வரை, உதய சூரியன் உதிக்கும் வரை கனவு காணுங்கள்’ என்று பதிவு செய்திருந்தார் கனிமொழியின் என்ற பதிவும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி.. இன்றும் நாளையும் இடி மின்னலுடன் மழை..!

5ஆவது முறையாக வெடிகுண்டு மிரட்டல்.. சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு..!

ராகுல் காந்தியால் அரசியல் சாசன புத்தக விற்பனை அதிகரிப்பு.. பொதுமக்களுக்கு விழிப்புணர்வு..!

மதுரை - பெங்களூரு வந்தே பாரத் ரயில்: இன்று சோதனை ஓட்டம்..!

விமான நிலையத்திற்கு எதிர்ப்பு: தமிழகத்தை விட்டே வெளியேற பரந்தூர் மக்கள் முடிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments