Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கைது செய்யப்பட்ட கனல் கண்ணனுக்கு ஆக., 26 வரை நீதிமன்ற காவல்!

Webdunia
திங்கள், 15 ஆகஸ்ட் 2022 (17:05 IST)
பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் ஆகஸ்டு 26-ஆம் தேதி வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
சில நாட்களுக்கு முன் திருச்சி அருகே ஸ்ரீரங்கத்தில் இந்து மாநாடு ஒன்றில் பேசிய கனல் கண்ணன் ஸ்ரீரங்கம் கோவில் முன் இருக்கும் பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என்றும் அன்றுதான் இந்துக்களுக்கு எழுச்சியான நாள் என்றும் பேசி இருந்தார். 
 
கனல் கண்ணனின் சர்ச்சைக்குரிய பேச்சை அடுத்து அவர் மீது புகார்கள் அளிக்கப்பட்ட நிலையில் இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர் 
 
கனல் கண்ணன் தாக்கல் செய்த முன்ஜாமீன் தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து அவர் தலைமறைவானார். இந்த நிலையில் புதுச்சேரியில் இன்று காலை கனல்கண்ணன் கைது செய்யப்பட்ட நிலையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். கனல் கண்ணனை ஆகஸ்டு 26-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கவுன்சிலர்களை தாக்கியதாக வழக்கு.. 22 ஆண்டுகளுக்கு பின் அமைச்சர் மா சுப்பிரமணியன் விடுதலை..!

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. தமிழகத்தில் மீண்டும் மழை: வானிலை அறிவிப்பு..!

வன்கொடுமை குற்றவாளிகளுக்கு மரண தண்டனை! - முதல்வரின் அதிரடி சட்டத்திருத்தம்! முழு விவரம்!

வாடகைக்கு நண்பராக சென்று ரூ.69 லட்சம் சம்பாதித்த இளைஞர்.. ஆச்சரிய தகவல்..!

சட்டப்பேரவையில் முதலமைச்சர் - எதிர்க்கட்சித் தலைவர் விவாதம்.. முழு விவரங்கள் இதோ:

அடுத்த கட்டுரையில்
Show comments