Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நமக்கு தலைவர்கள் வேண்டாம்; சமூக சேவகர்கள் வேண்டும்! – கமல்ஹாசன் பரப்புரை!

Advertiesment
நமக்கு தலைவர்கள் வேண்டாம்; சமூக சேவகர்கள் வேண்டும்! – கமல்ஹாசன் பரப்புரை!
, ஞாயிறு, 6 பிப்ரவரி 2022 (16:52 IST)
தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யமும் போட்டியிடும் நிலையில் இன்று தேர்தல் பிரச்சாரத்தை கமல்ஹாசன் தொடங்கியுள்ளார்.

தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று முன்தினம் நடந்து முடிந்த நிலையில் பல்வேறு கட்சி வேட்பாளர்களும், சுயேட்சை வேட்பாளர்களும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்நிலையில் இன்று முதல் அரசியல் கட்சி தலைவர்கள் தேர்தல் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். சென்னையில் மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன் பிரச்சாரத்தை தொடங்கினார். அப்போது பேசிய அவர் “நீட் மசோதா விவகாரத்தில் ஆளுனர் மத்திய அரசு சொல்வதை கேட்கிறார். ரவுடிகளுக்கு மக்களை கண்டால் பயம் வர வேண்டும். அது நேர்மையான அரசால் மட்டுமே செய்ய முடியும். விண்வெளிக்கு ராக்கெட் அனுப்பும் நம்மால் மலம் அள்ளும் என் தம்பிகளுக்கு ஒரு இயந்திரம் செய்ய முடியாதா?” எனப் பேசியுள்ளார்.

மேலும் தமிழக மக்கள் தங்களுக்கு ஒரு தலைவரை தேடக் கூடாது. சமூக சேவகர்களையே தேட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நாளை டிஸ்சார்ஜ் ஆகிறார் வாவா சுரேஷ்!