Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வருக வருக புது யுகம் படைக்க: கட்சி விழாவுக்கு டுவிட்டரில் அழைப்பு விடுத்த கமல்

Webdunia
செவ்வாய், 20 பிப்ரவரி 2018 (10:40 IST)
நடிகர் கமல்ஹாசன் நாளை மதுரையில் நடைபெறவுள்ள பிரமாண்டமான பொதுக்கூட்டத்தில் தனது கட்சியின் பெயரை அறிவித்து, கட்சி கொடியையும் ஏற்றவுள்ளார். மேலும் தனது கட்சியின் கொள்கைகளையும் அவர் பகிரங்கமாக அறிவிக்கவுள்ளார். கமல்ஹாசனின் கட்சி கொள்கைகள் என்னவாக இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள அனைவரும் ஆவலுடன் உள்ளனர்.
 
இந்த நிலையில் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் தனது கட்சியின் மாநாட்டுக்கு வருமாறு அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார். அவர் அதில் கூறியிருப்பதாவது: நாளை துவங்கவுள்ளது நம் நெடும் பயணம். நாளை மாலை 6 மணிக்கு மதுரை ஒத்தக்கடை மைதானத்தில் ஒரு மாபெரும் பொதுக்கூட்டத்தில் நமது கட்சிக் கொடியை ஏற்றவுள்ளேன். புதிய கட்சியின் பெயரையும் எமது கொள்கையின் சாராம்சத்தையும் விளக்கவுள்ளேன். வருக வருக புது யுகம் படைக்க' என்று கூறியுள்ளார்.
 
கமல்ஹாசனின் இந்த டுவீட்டுக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது டுவீட் பதிவு செய்த மூன்றே நிமிடங்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட லைக்குகள் குவிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

5,8 வகுப்புகளுக்கு ஆல்பாஸ் முறை ரத்து.. புதுவை கல்வி அமைச்சர் அறிவிப்பு..!

நாளை கிறிஸ்துமஸ் பண்டிகை.. சென்னை மெட்ரோ சேவையில் மாற்றம்..!

எம்ஜிஆர் மலை என்றால் மோடி..? இருவரையும் ஒப்பிடுவதா? - அண்ணாமலைக்கு ஜெயக்குமார் பதிலடி!

பழைய மற்றும் பயன்படுத்திய கார்களுக்கு 18% ஜிஎஸ்டி - கார் வாங்குபவர்களை பாதிக்குமா?

இந்த 63 லட்சம் பேர் எந்த நாட்டை சேர்ந்தவர்கள்? மூத்த குடிமக்களுக்கான பயணச்சலுகை குறித்து சு வெங்கடேசன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments