Publish Date: Mon, 19 Feb 2018 (14:22 IST)
Updated Date: Mon, 19 Feb 2018 (14:26 IST)
மேக் கணினிகளின் டிவிட்டர் டெஸ்க்டாப் செயலிக்கான சப்போர்ட் நிறுத்தப்படுவதாக டிவிட்டர் அறிவித்துள்ளது. இதனால் இனிமேல் டிவிட்டரை மூன்றாம் தரப்பு சேவையாக பயன்படுத்த முடியுமாம்.
மேக் கணினிகளுக்கான ட்விட்டர் செயலியை டவுன்லோடு செய்ய முடியாது என @TwitterSupport ட்வீட்-ல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மேக் கணினிகளுக்கான ட்விட்டர் சப்போர்ட் 30 நாட்களில் நிறைவுறும் என்றும் தெரிவித்துள்ளது.
இதனால் இனி மேக் கணினிகளில் ட்விட்டர் சேவையை தொடர்ந்து பயன்படுத்த வாடிக்கையாளர்கள் ட்வீட்டெக் (Tweetdeck) போன்ற மூன்றாம் தரப்பு சேவைகளை பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
மேக் கணினிகளில் இருந்து ட்விட்டர் நீக்கப்படுவது குறித்த தகவல் வெளியாகும் முன்பு வரை ஆப்பிள் ஆப் ஸ்டோரில் ட்விட்டர் செயலிக்கு வாடிக்கையாளர்கள் வழங்கும் ரிவியூ 1.7/5 என இருந்தது குறிப்பிடத்தக்கது.