Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மத சண்டை மூட்டி அரசியல் பண்ணல..! – கேப்பில் குத்திக்காட்டிய கமல்!

Webdunia
புதன், 16 டிசம்பர் 2020 (11:05 IST)
தமிழக சட்டமன்ற தேர்தல் பரப்புரைக்காக திருநெல்வேலி சென்றுள்ள கமல் மதங்களுக்குள் சண்டை மூட்டி நாங்கள் அரசியல் செய்யவில்லை என பேசியுள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மக்கள் நீதி மய்யம் தற்போதே தேர்தல் பிரச்சாரத்தை துவக்கி விட்டிருக்கிறது. இதற்காக நேற்று முன் தினம் மதுரை சென்ற கமல் அங்கிருந்து தொடர்ந்து தென் தமிழக மாவட்டங்களில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

இன்று திருநெல்வேலியில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர் “தமிழகம் முழுவதும் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருகிறது. விவசாயிகள் முதல் விஞ்ஞானிகள் வரை பணம் இல்லாமல் இருக்கிறார்கள். மக்கள் நீதி மய்யம் ஆட்சிக்கு வந்தால் இந்த பிரச்சினைகளை சரிசெய்யும்” என்று பேசியுள்ளார்

மேலும் “ஆட்சிக்கு வருவோம் என்று நாங்கள் கூறுவது மக்களே ஆள வேண்டும் என்பதற்காகதான். ஆட்சியாளர்கள் மக்களுக்கு சேவகர்களாக இருக்க வேண்டும். மக்களின் அன்பு மட்டும்தான் எங்களை ஆளும். மதங்களுக்குள் சண்டை மூட்டி நாங்கள் அரசியல் செய்யவில்லை” என கூறியுள்ளார்.

சமீபகாலமாக தமிழக அரசியலில் பெரும் கட்சிகளுக்கு மத ரீதியான வாத, பிரதிவாதங்கள் அதிகரித்துள்ள நிலையில் கமல் இவ்வாறு சுட்டிக்காட்டி பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லாஸ் ஏஞ்சல் காட்டுத்தீயை அணைக்க கனடா உதவி.. விரைந்தது விமானப்படை..!

ஆளுங்கட்சி எதிர்க்கட்சிகளை சமமாக பாவிக்க வேண்டும்.. தமிழக போலீசாருக்கு நீதிமன்றம் அறிவுரை..!

டெல்லியில் 60,000 வாக்காளர்கள் மாயம்! ஆம் ஆத்மி அரசு மீது பா.ஜ. கபகீர் குற்றச்சாட்டு

மாதக்கணக்கில் நடக்கும் போராட்டம்.. விஷம் குடித்து தற்கொலை செய்த விவசாயி..!

மாதாந்திர மின் கட்டணம் நடைமுறைக்கு வருவது எப்போது? அமைச்சர் செந்தில் பாலாஜி

அடுத்த கட்டுரையில்
Show comments