Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுகவோடு கூட்டணி அமைக்க போறீங்களா? – கமல் சொன்ன ட்விஸ்ட் பதில்!

Webdunia
செவ்வாய், 28 பிப்ரவரி 2023 (13:36 IST)
எதிர்காலத்தில் திமுகவுடன் கூட்டணி அமையுமா என்பது குறித்து கமல்ஹாசன் பதில் அளித்துள்ளார்.

பிரபல நடிகரான கமல்ஹாசன் தனது மக்கள் நீதி மய்யம் கட்சி மூலமாக அரசியலிலும் நுழைந்து செயலாற்றி வருகிறார். கடந்த நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களிலும், உள்ளாட்சி தேர்தல்களிலும் ம.நீ.ம போட்டியிட்ட நிலையில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. இந்நிலையில் தற்போது ஈரோடு கிழக்கில் நடைபெற்ற இடைத்தேர்தலில் ம.நீ.ம பங்கேற்கவில்லை. மேலும் கமல்ஹாசன் தனது கட்சி ஆதரவை காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு வழங்கினார். இதனால் திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யமும் இணைய உள்ளதாக பேச்சுகள் எழத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் மு.க.ஸ்டாலின் புகைப்பட தொகுப்பு கண்காட்சி தொடங்கப்பட்டது. நடிகர் கமல்ஹாசன் இந்த கண்காட்சியை திறந்து வைத்தார். பின்னர் பேசிய அவர், தமிழகத்தின் மிகசிறந்த அரசியல் தலைவரின் மகனாகவும், அரசியல் தலைவராகவும் மு.க.ஸ்டாலினின் புகைப்படங்கள் வரலாற்று ஆவணங்களாக உள்ளதாக பேசியுள்ளார்.

அப்போது எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியா அல்லது திமுகவுடன் கூட்டணி அமையுமா? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர் “திமுக உடனான கூட்டணி குறித்து இப்போது சொல்ல முடியாது. கதையில் சீன் பை சீன் சொன்னால்தான் சுவாரஸ்யமாக இருக்கும். இப்போதே க்ளைமேக்ஸுக்கு செல்லக் கூடாது” என கூறியுள்ளார்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசே தொடங்கிய ஓட்டுனர் பயிற்சி பள்ளி.. கார், பைக் ஓட்டும் பயிற்சிக்கு எவ்வளவு கட்டணம்?

அவதூறு வழக்கில் நேரில் ஆஜராக வேண்டும்.! ராகுலுக்கு பறந்த உத்தரவு..!!

இன்று இரவு 10 மாவட்டங்களில் கொட்டப்போகுது மழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அப்பர் பெர்த் கழன்று விழுந்ததால் ரயில் பயணி பரிதாப பலி.. ரயில் பயணத்தில் பாதுகாப்பு இல்லையா?

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எத்தனை பேர் போட்டி: இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

அடுத்த கட்டுரையில்
Show comments