Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இனிமே நோ சினிமா.. ஒன்லி அரசியல் - அதிர்ச்சி கொடுக்கும் கமல்ஹாசன்

Webdunia
புதன், 14 பிப்ரவரி 2018 (11:04 IST)
நடிகர் கமல்ஹாசன் இனிமேல் சினிமாவில் நடிக்கப் போவதில்லை எனக்கூறி அவரின் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

 
நடிகர் கமல்ஹாசன் வருகிற 21ம் தேதி மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் வீட்டிலிருந்து தனது அரசியல் பயணத்தை துவங்குவதாக ஏற்கனவே அறிவித்துள்ளார். அதைத் தொடர்ந்து அன்று மதுரையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் தனது அரசியல் கட்சியின் பெயர், சின்னம், கொடி ஆகியவற்றை அவர் அறிமுகம் செய்ய உள்ளார். 
 
அதேபோல், தனது அரசியல் கட்சியின் பெயரை பதிவு செய்வதற்காக தேர்தல் ஆணையத்திடம் அவர் நேரம் கேட்டுள்ளார். அநேகமாக, வருகிற 15ம் தேதி அவர் தேர்தல் ஆணையத்தில் தனது அரசியல் கட்சியின் பெயரை பதிவு செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
சமீபத்தில் அமெரிக்கா சென்று அங்குள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் கமல்ஹாசன் பேசினார். அதன்பின்பு ஒரு ஆங்கில பத்திரிக்கைக்கு பேட்டியளித்த அவர்  “தற்போது நடித்துக் கொண்டிருக்கும் இரு படங்களைத் தவிர (விஸ்வரூபம் 2, இந்தியன் 2) புதிதாக எந்த படத்திலும் இனிமேல் நடிக்கப்போவதில்லை எனக் கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
 
எனவே, அந்த இரு படங்களுக்கும் மேல் இனிமேல் அவர் தீவிர அரசியலில் அவர் ஈடுபடப்போகிறார் எனத் தெரிகிறது. அவர் அரசியலுக்கு வருவதை அவரின் ரசிகர்கள் ஆதரித்தாலும், இனிமேல் அவர் சினிமாவில் நடிக்க மாட்டார் என்கிற செய்தி அவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக அளவில் இந்தியாவின் நன் மதிப்பை கெடுக்கும் அதானி குழுமம்: டாக்டர் கிருஷ்ணசாமி

தமிழகத்தில் கூடுதல் விமானங்களை இயக்குகிறது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முழு விவரங்கள்..!

தவெக மாநாட்டுக்கு இடம் கொடுத்தவர்களுக்கு மரியாதை.. பொறுப்பாளர்களுக்கு தங்க மோதிரம்..!

கூட்டணியில் மட்டுமே பங்கு.. ஆட்சியில் எப்போதும் பங்கு கிடையாது: அமைச்சர் ஐ. பெரியசாமி

ராகுல் காந்தியை விட அதிக வாக்குகள் பெற்ற பிரியங்கா காந்தி. வயநாடு தொகுதி நிலவரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments