Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா வாழ்க, தமிழ்நாடு ஓங்குக, தமிழ் வெல்க! கமல்ஹாசன் அறிக்கை..!

Siva
செவ்வாய், 4 ஜூன் 2024 (18:00 IST)
இந்தியா கூட்டணி வெற்றி குறித்து நடிகர் கமல்ஹாசன் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
திமுக அரசு செய்துகாட்டிய பணிகளால் கிடைத்த வெற்றியை அதன் தலைமையிலான கூட்டணி தமிழ்நாட்டில் அறுவடை செய்திருக்கிறது. மக்களுக்காகச் சிந்தித்து, மக்கள் பணிகளுக்கு முன்னுரிமை கொடுத்து நடத்தப்பெறும் நல்லாட்சிக்கு ஆதரவளிக்க மக்களும் தயாராக இருப்பதையே இந்த மாபெரும் வெற்றி காட்டுகிறது.
 
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக 2019 மக்களவைத் தேர்தலில் தொடங்கி, தான் எதிர்கொண்ட அனைத்துத் தேர்தல்களிலுமே அருமை நண்பர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் வெற்றியைக் குவித்திருக்கிறார். அவருக்கு என் மனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
 
இந்தியாவைக் காக்கும் போரில், திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து களம் கண்ட கூட்டணிக் கட்சியினருக்கும், மக்கள் நீதி மய்யத்தின் தொண்டர்களுக்கும், எங்கள் கூட்டணிக்கு வாக்களித்த தமிழ்நாட்டு மக்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.
 
சிந்தாமல் சிதறாமல் சந்தேகம் இல்லாமல் நாம் பெற்றிருக்கும் இந்த வெற்றி இந்தியாவிற்கு வழியும், ஒளியும் காட்டக் கூடியவை. இந்தியா வாழ்க, தமிழ்நாடு ஓங்குக, தமிழ் வெல்க!
 
இவ்வாறு கமல்ஹாசன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சட்டவிரோதமாக குடியேற நினைத்தால் இதுதான் நிலை.. அதிர்ச்சி வீடியோ வெளியிட்ட அமெரிக்கா..!

2025-2026-ம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை எப்போது? தொடக்க கல்வி இயக்குநர் தகவல்..!

இந்தியாவில் வெளியானது Realme P3 Pro மற்றும் Realme P3x 5G! - சிறப்பம்சங்கள் என்னென்ன?

இந்தியாவிடம் நிறைய பணம் இருக்கிறது. 21 மில்லியன் டாலர் ஏன் கொடுக்க வேண்டும்: டிரம்ப்

கும்பமேளா நீட்டிக்கப்படாது: பிரயாக்ராஜ் கலெக்டர் திட்டவட்ட அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments