Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இனி எஞ்சிய வாழ்க்கை உங்களுக்காக: பொதுக்கூட்டத்தில் கமல் பேச்சு!

இனி எஞ்சிய வாழ்க்கை உங்களுக்காக: பொதுக்கூட்டத்தில் கமல் பேச்சு!
, புதன், 21 பிப்ரவரி 2018 (21:09 IST)
நடிகர் கமல்ஹாசன் தனது அரசியல் பிரவேசத்தை இன்று அப்துல்கலாம் வீட்டிலிருந்து துவங்கினார். மதுரை பொதுக்கூட்டத்தில் தனது கட்சி பெயரையும் கொடியையும் அறிமுகம் செய்தார்.

அதன் பின்னர் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசினார். அதை தொடர்ந்து கமல் பொதுக்கூட்டத்தில் பேசினார். அவர் பேசியது பின்வருமாறு...
 
செயல் வீரன் (கெஜ்ரிவால்) கூறினார் இங்கு தமிழகத்தில் பணத்திற்கு பஞ்சமில்லை நல்ல மனதிற்குதான் பஞ்சம் என்று, இந்த கூட்டத்தின் தலைவன் இல்லை நான் தொண்டன்.
 
சாதிய மத விளையாட்டுகள் நிறுத்த வேண்டும். ஊழலை குறைத்தால் அனைவருக்கும் மின்சாரம் எப்போதும் வரும். 
 
வேலை வாய்ப்பின்றி இருக்கும் படித்த இளைஞர்கள் அதிக அளவில் இருக்கிறார். அதை இல்லாமல் செய்ய முடியும். 
 
நாங்கள் கிரமங்கள் தத்தெடுத்ததை கேலி செய்கிறார்கள். நாங்கள் எட்டு கிராமங்களில் அனைத்தையும் செய்து காட்டுகிறோம். அதிருப்தி இருந்தால் கூறுங்கள் திருத்தி கொள்கிறோம்.
 
பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று சொல்ல மாட்டோம். நீங்கள் தண்ணீர் தானே கேட்கிறீர்கள். நான் உங்களுக்கு அங்கிருந்து ரத்தமே வாங்கி தருகிறேன். ரத்தம் என்றால் யுத்தமில்லை, ரத்த தானம்.
 
அநீதிகளைப் பார்த்துக் கொண்டு இன்னும் எத்தனை காலம் காத்திருப்போம். இன்று பேசும் நாள்... நாளை செயல்பட வேண்டும்.

கடந்தவை கடந்தவையாக மட்டும் இருக்காது. மறந்தது மறந்தவையாக இருக்காது. 6000 ரூபாய் என்று குறைவான விலைக்கு விற்று விட்டீர்கள். நல்ல ஆட்சிக்கு நீங்கள் வாக்கு அளித்து இருந்தால் ரூ.6000 இல்லை நீங்கள் ரூ. 6 லட்சம் கிடைத்திருக்கும்.
 
வாக்குக்காக நாங்கள் பணம் கொடுக்க மாட்டோம் என பேசினார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கமலுக்கு வாக்கு சேகரித்த கெஜ்ரிவால்