தேதி குறிக்க முடியாது... ரஜினியுடனான கூட்டணி குறித்து கமல் சூசகம்!

Webdunia
புதன், 20 நவம்பர் 2019 (12:35 IST)
ரஜினி உடன் இணையும் தேதி எப்போது என்றெல்லாம் சொல்ல முடியாது என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 
 
கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கியதிலிருந்து மத்திய, மாநில அரசுகளை விமர்சித்து வருகிறார். அதே போல் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கவில்லை என்றாலும் கூட அரசியலுக்குள் நுழைவதற்கான ஆயத்தங்களில் ஈடுபட்டு வருவதால் தமிழகத்தில் வெற்றிடம் நிலவுகிறது என அடிக்கடி பேசி வருகிறார்.
 
இந்நிலையில் நானும் ரஜினியும் இணைய வேண்டிய அவசியம் ஏற்பட்டால், தமிழக மேம்பாட்டிற்காக சேர்ந்து பயணிப்போம் என கமல் கூறினார். இதனை தொடர்ந்து ரஜினிகாந்த் அளித்த பேட்டியில், தேவைப்பட்டால் இருவரும் தமிழக மக்களின் நலனுக்காக சேர்ந்து பயணிப்போம் என கூறினார். 
 
தற்போது இன்று காலை பேச்சியில், எங்கள் நட்பைவிட முக்கியமான செய்தி தமிழகத்தின் நலன் என்பது தான். தமிழக மக்களின் நலன் கருதி தேவைப்பட்டால் இணைவோம். ரஜினி உடன் இணையும் தேதி எப்போது என்றெல்லாம் சொல்ல முடியாது என கமல் தெரிவித்துள்ளார். 
 
ரஜினி - கமல் அரசியல் பிரமுகர்கள், கருத்து தெரிவித்துவரும் நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் ரஜினி - கமல் இணைந்தால் கமல் தான் முதல்வர் வேட்பாளர் என கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாகவே பதவி விலக வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்:

ஒரே மேடையில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்: இருவருடனும் 10 வருடங்கள் வாழ்ந்து குழந்தை பெற்ற பின் திருமணம்..!

நிர்மலா சீதாராமன் 'டீப்ஃபேக்' வீடியோ: பெங்களூரு மூதாட்டியிடம் ரூ.33 லட்சம் மோசடி!

யூடியூப் வீடியோ பார்த்து அறுவை சிகிச்சை: உ.பி.யில் பெண் பலி.. போலி மருத்துவர் மீது வழக்கு

பாலியல் வன்கொடுமைக்கு பின் அந்தரங்க உறுப்பில் இரும்புக்கம்பி.. 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments