Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தல்கள் முடிந்தன, பசுத்தோல் உதிர்ந்தன - கமல் சாடல்!

Webdunia
புதன், 23 மார்ச் 2022 (11:58 IST)
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

 
நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலை கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக உயராமல் இருந்த நிலையில் நேற்று திடீரென எழுபத்தி ஆறு காசுகள் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 
 
இந்நிலையில் இன்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து இருப்பது அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக உள்ளது. சற்றுமுன் வெளியான  தகவலின்படி இன்று பெட்ரோல் விலை ஒரு லிட்டர் 75 காசுகள் உயர்ந்து உள்ளது என்றும் டீசல் விலை 76 காசுகள் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இதனிடையே மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவர் குறிப்பிட்டுள்ளதாவது, தேர்தல்கள் முடிந்தன. இதோ பசுத்தோல் உதிர்ந்துவிட்டது. பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வு தொடங்கிவிட்டது. கச்சா எண்ணெய் விலை உயர்வு என்பார்கள். ஆனால் அது கீழே இறங்கிய போதும் விலையைக் குறைக்கவில்லை இவர்கள். அதில் சேர்த்த லட்சம் கோடிகளை வைத்து இப்போது சரிக்கட்டலாமே.

தொடர்புடைய செய்திகள்

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments