Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தினகரன் கட்சிக்கு பச்சைக்கொடி காட்டிய கமல்ஹாசன் !

Webdunia
சனி, 27 பிப்ரவரி 2021 (16:40 IST)
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம்தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. மே 2 ஆம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் என நேற்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதனால் தமிழக அரசியல்களம் சூடுபிடித்துள்ளது.திராவிட கட்சிகள் மற்ற கட்சிகளுடன் கூட்டணி குறித்தும் தொகுதிப் பங்கீடு குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இன்று காலை ச.ம.க தலைவர் சரத்குமார் நடிகர் கமல்ஹாசனை சந்தித்துப்பேசினார். ஏற்கனவே சமக அதிமுகவில் இருந்து வெளியேறி, திமுகவில் இருந்து வெளியேறிய ஐஜேகே கட்சியுடன் அக்கட்சி கூட்டணி வைத்துள்ளதால் கமலின் மக்கள் நீதி மையத்துடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியதாகத் தெரிகிறது.

இந்நிலையில், தற்போது, தினகரனின் அமமுக கட்சி கூட்டணிக்கு வந்தால் வரவேற்கத் தயார் என கமல்ஹாசன் கூறியுள்ளார்.

அதேசமயம் எந்தக் கட்சி கூட்டணிக்கு வந்தாலும் முதல்வர் வேட்பாளர் நான் தான் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், மக்கள் நீதி மய்யம் சார்பில்  பழ. கருப்பையா போட்டியிடவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

ஆரஞ்சு அலெர்ட்..! 3 நாட்களுக்கு நீலகிரிக்கு வராதீங்க! – மாவட்ட கலெக்டர் வேண்டுகோள்!

தெரு நாய்களுக்கு சோறு வெச்சது தப்பா? இளம்பெண்ணை கட்டையால் தாக்கிய ஆசாமி!

திருப்பதி செல்லும் ரயில்கள் ரேணிகுண்டா வரை மட்டும் செல்லும்: தெற்கு ரயில்வே

பங்குச்சந்தை இன்று மீண்டும் உயர்வு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

இந்து, முஸ்லீம்களுக்கு தனித்தனி பட்ஜெட்டா? பிரதமர் பேச்சுக்கு ப சிதம்பரம் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments