Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினியின் தீவிர ரசிகரின் மரணத்திற்கு கமல் தெரிவித்த அனுதாபம்

Webdunia
வியாழன், 1 பிப்ரவரி 2018 (23:01 IST)
தீவிர தமிழ் பற்றாளரும் எழுத்தாருமான தகடூர் கோபி அவர்கள் இன்று காலமானார். அவரது மறைவு தமிழ் மொழிக்கு ஒரு பேரிழப்பு என தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தகடூர் கோபி ஒரு தீவிர ரஜினிகாந்த் ரசிகர் என்றும் Rajinifans.com என்ற இணையதளத்தின் அட்மினாகவும் இருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தகடூர் கோபி ஒரு தீவிர ரஜினி ரசிகராக இருந்தாலும் அவரது மறைவிற்கு நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது டுவிட்டரில், 'குமாரசாமிப்பேட்டைக் குமாரன்  தகடூர் கோபியை நவீனக் கணினி யுக உலகத் தமிழ் சமுதாயம் வணங்குகிறது. அவர் தமிழர்க்கு அளித்த கொடையை மறவோம். தமிழ் தாய்க்கு இது போல் குழந்தைகள் இனியும் பிறக்கும் ,பிறக்க வேண்டுமென்பதே நம் அவா. குடும்பத்தார்க்கு ஆழ்நத அனுதாபங்கள்.
என்று குறிப்பிட்டுள்ளார்

பலருக்கும் தெரியாத ஒரு தமிழ்ப்பற்றாளரை உலகிற்கே தெரிய வைத்த கமல்ஹாசனின் பெருந்தன்மையை ரஜினி ரசிகர்கள் உள்பட டுவிட்டர் பயனாளிகள் போற்றி வருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமணங்களை இனி ஆன்லைனில் பதிவு செய்யலாம்: தமிழக அரசின் புதிய திட்டம்

சென்னை உள்பட 7 மாவட்டங்களில் `ஸ்கரப் டைபஸ்' பாக்டீரியா தொற்று: மருத்துவர்கள் எச்சரிக்கை..!

திருச்செந்தூரில் திடீரென கருப்பாக மாறிய கடல் நீர்: பக்தர்கள் அதிர்ச்சி..!

போபால் விஷவாயு சம்பவம்: 40 ஆண்டுகள் கழித்து அகற்றப்படும் கழிவுகள்!

100 ஆண்டுகளில் வெப்பமான ஆண்டு 2024 தான்.. இன்னும் அதிகரிக்கும்! - இந்திய வானிலை ஆய்வு மையம்!

அடுத்த கட்டுரையில்
Show comments