கமல்ஹாசன் சாதாரணமாக டுவீட் போட்டாலே பலருக்கு புரியாது. இந்த நிலையில் அவர் தற்போது வார இதழ் ஒன்றில் எழுதி வரும் தொடரில் ஒரு கவிதையை எழுதியுள்ளார். ஆனால் அந்த கவிதை பிழையுடன் பிரசுரமாகியுள்ளது.
இதற்கு விளக்கம் கொடுத்துள்ள கமல், ஆனந்தவிகடனில் பிரசுரமான என் கவிதை தொலைபேசியில் நான் சொல்ல எழுதிச் சேர்த்ததால் பல பிழைகள் உள்ளன. மன்னிக்க. 2000 ல் நான் எழுதியதின் பிரதி கீழே என்று கூறி ஒரிஜினல் கவிதையை பதிவு செய்துள்ளார்.
அப்படியானால் இதற்கு முன் ஒருசில பிழைகளுடன் வெளிவந்த கமலின் டுவீட்டுக்கள் குறித்த சந்தேகமும், அவர் உண்மையிலேயே தானாக டுவீட் செய்கிறாரா? அல்லது அவரது பெயரில் வேறு நபர்கள் அவர் சொல்ல சொல்ல டுவீட் போடுகின்றாரா? என்ற சந்தேகத்தை நெட்டிசன்கள் கிளப்பியுள்ளனர். இதற்கும் ஒரு விளக்கம் கமல் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.