Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கமல்ஹாசனின் தமிழுக்கு பதிலடி கொடுத்த ரஜினிகாந்த்

Webdunia
செவ்வாய், 6 மார்ச் 2018 (08:33 IST)
நடிகர் கமல்ஹாசன் கடந்த மாதம் அரசியல் கட்சி தொடங்கியபோது, தொண்டர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது தமிழ் வளர்ச்சி குறித்து அவர் பேசியபோது,' எல்லோரும் தமிழில் பேசினால் தமிழ் தானாக வளரும் என்றும், நமது குழந்தைகளுக்கு ஆரம்பத்தில் இருந்தே தமிழ்வழி கல்வியை தர வேண்டியது நமது கடமை என்றும் பேசினார்.

இந்த நிலையில் நேற்று எம்ஜிஆர் சிலை திறப்பு விழாவில் பேசிய ரஜினிகாந்த், 'தமிழில் பேசினால் மட்டும் தமிழ் வளராது என்றும், தமிழன் வளர்ந்தால் தானாக தமிழ் வளர்ந்து விடும் என்றும் பேசினார். மேலும் மாணவர்கள் நன்றாக ஆங்கிலம் கற்று கொள்ள வேண்டும் என்றும், ஆங்கிலத்தில் புலமை பெற்று பல மாநிலங்கள், பலநாடுகளுக்கு சென்று வளர்ச்சி அடைந்தால் தமிழன் வளர்வான், அப்போது தமிழும் வளரும் என்றும் பேசினார்

கமல், ரஜினி ஆகிய இருவரும் நெருங்கிய நண்பர்கள் போல் வெளியில் காட்டி கொண்டாலும் இருவருக்கும் இடையே கடந்த பல ஆண்டுகளாக இருந்து வந்த சினிமா போட்டி தற்போது அரசியலிலும் தொடர்வதாகவும் தேர்தல் நெருங்க நெருங்க இருவருக்கும் இடையே கருத்து மோதல்கள் இன்னும் அதிகமாக இருக்க  வாய்ப்பு உள்ளது என்றும் அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கும்பமேளாவுக்கு இஸ்லாமியர்களும் வரலாம்.. ஆனால்..? - யோகி ஆதித்யநாத் விடுத்த எச்சரிக்கை!

3ம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு மாரடைப்பு?? பள்ளியிலேயே பலியான சோகம்!

பாஜகவை நோக்கி சுட்டு விரலை நீட்டுவாரா விஜய்? நீட் விவகாரம் குறித்து திமுக கேள்வி..!

அமைச்சர் சேகர்பாபுவை பார்த்தால் பரிதாபம்தான் வருகிறது: அண்ணாமலை

திருமணம் செய்ய வற்புறுத்திய பெண் கொலை.. 8 மாதங்களாக பிணத்தை பிரிட்ஜில் வைத்த நபர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments