Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பச்சை பட்டு உடுத்தி ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்.. பக்தர்கள் கரகோஷம்..!

பச்சை பட்டு உடுத்தி ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்.. பக்தர்கள் கரகோஷம்..!
, வெள்ளி, 5 மே 2023 (07:35 IST)
மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் என்று அதிகாலை நடந்த நிலையில் பக்தர்கள் கோவிந்தா என்ற கரகோஷத்துடன் அவரை வரவேற்றனர். 
 
மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமண மற்றும் திருத்தேர் சமீபத்தில் முடிந்த நிலையில் இன்று அதிகாலை 5 30 மணிக்கு கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார். 
 
அவர் பச்சை பட்டு உடுத்தி தங்க வாகனத்தில் தாமரை மலர்களால் அலங்கரிக்கப்பட்ட இடத்தில் இறங்கிய போது கோவிந்தா கோவிந்தா என்ற கோஷத்தை பக்தர்கள் எழுப்பினார். 
 
மதுரை மாநகரிலிருந்து மட்டுமின்றி அண்டை மாநகரங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வைகை ஆற்றல் குவிந்து இருந்ததால் 5000க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. மதுரையில் வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் வைபவம் மிகவும் சிறப்பாக நடைபெற்றதாக கூறப்படுகிறது.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

68.75 கோடியை தாண்டியது உலக கொரோனா பாதிப்பு!