Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேனாம்பேட்டை டி.எம்.எஸ் மெட்ரோ நிலையத்திற்கு கலைஞரின் பெயர்?

Webdunia
வெள்ளி, 11 செப்டம்பர் 2020 (15:54 IST)
தேனாம்பேட்டை டி.எம்.எஸ் மெட்ரோ நிலையத்திற்கு கலைஞரின் பெயர் வைக்க சென்னை உயர்நீதிமன்ற மனு தாக்கல். 
 
சென்னையில் ஆலந்தூர், சென்ட்ரல், புறநகர் பேருந்து நிலைய மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு கடந்த ஜூலை மாதம் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. மெட்ரோ திட்டத்தை செயல்படுத்த ஜெயலலிதா எடுத்த நடவடிக்கையை நினைவுகூரும் வகையில் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் குறிப்பிட்டார். 
 
 அதன்படி, ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ எனவும், சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையம் புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் சென்ட்ரல் மெட்ரோ எனவும் புறநகர் பேருந்து நிலைய மெட்ரோ, புரட்சித் தலைவி டாக்டர் ஜெ.ஜெயலலிதா CMBT மெட்ரோ எனவும் மாற்றம் செய்யப்பட்டது.   
 
ஆனால் அப்போதே மெட்ரோ ரயில் திட்டத்திற்கான ஒப்பந்தம் திமுக ஆட்சி காலத்தில் கலைஞர் அவர்களால் நிறைவேற்றப்பட்டது. அப்போது ஜெயலலிதா மெட்ரோ ரயில் திட்டத்தை மிகவும் கடுமையாக எதிர்த்தார். ஆனால் கலைஞர் பெயரை விடுத்து கோயம்பேடு மெட்ரோவிற்கு ஜெயலலிதா பெயர் சூட்டப்பட்டுள்ளதாக திமுகவினர் வருத்தம் தெரிவித்தனர். 
 
அதாவது கலைஞர் ஆட்சியில் ஏற்படுத்தப்பட்ட இந்த திட்டத்திற்காக ஒரு மெட்ரோ நிலையத்திற்கு கூட கலைஞர் பெயர் வைக்கப்படவில்லை என வருத்தம் கொண்டனர். இந்த வருத்தம் ஆதங்கமாக மாறி இப்போது உயர்நீதிமன்ற மனு தாக்கல் வரை சென்றுள்ளது. 
 
கலைஞர் தமிழ் பேரவையின் செயலாளர் ராதாகிருஷ்ணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேனாம்பேட்டை டி.எம்.எஸ் மெட்ரோ நிலையத்திற்கு "டாக்டர். கலைஞர் கருணாநிதி டி.எம்.எஸ் மெட்ரோ ரயில் நிலையம்" என பெயரை வைக்க உத்தரவிடக் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

சவுதி அரேபியால் வெப்ப அலை.. ஹஜ் பயணம் செய்த 19 பேர் பரிதாப பலி..!

கர்வ்ட் ஸ்கிரீன் மற்றும் பல்வேறு சிறப்பம்சங்களுடன் OPPO F27 Pro Plus 5G!

மன்னார்குடியில் பட்டாசு விபத்து: உயிரிழந்த நபரின் குடும்பத்திற்கு நிவாரணம்.. முதல்வர் உத்தரவு

வாரத்தின் முதல் நாளில் தங்கம் விலை குறைவு.. இன்றைய சென்னை நிலவரம்..!

மேற்குவங்கத்தில் பயங்கர ரயில் விபத்து.. பலியானோர் எண்ணிக்கை எவ்வளவு? உதவி எண்கள் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments