Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கபடி போட்டியின்போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த வீரர்: நிதியுதவி அறிவித்த முதல்வர்!

Webdunia
திங்கள், 20 பிப்ரவரி 2023 (14:14 IST)
கபடி போட்டியில் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த வீரரின் குடும்பத்திற்கு ரூபாய் 2 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார் 
 
 இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது” குளித்தலை வட்டம் சத்தியமங்கலம் கிராமம் கணக்குப்பிள்ளையூர் என்ற பகுதியில் நடந்த கபடி போட்டியில் கலந்து கொண்ட மாணிக்கம் என்ற 26 வயது நபர் நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்துள்ளார். 
 
போட்டியில் வெற்றி பெற்ற பிறகு நெஞ்சுவலி மிகுதியாக இருந்ததால் அவர் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தார். அவரது மறைவு கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன் 
 
உயிரிழந்த கபடி விளையாட்டு வீரரின் குடும்பத்தினருக்கு தனது எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதோடு ரூபாய் 2 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கவும் உத்தரவிட்டு உள்ளேன் என குறிப்பிட்டுள்ளார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நேற்று உயர்ந்த தங்கம் விலை இன்று மீண்டும் சரிவு.. சென்னையில் இன்றைய நிலவரம்..!

மழைநீர் வடிகால் பணிகள் அனைத்தும் போட்டோ ஷூட்கள், வெற்று விளம்பரங்கள்: ஈபிஎஸ்

புயல் எதிரொலி.. மூடப்பட்டது சென்னை விமான நிலையம்.. அனைத்து விமானங்களும் ரத்து..!

புயல், கனமழையால் பாதிப்பா? உதவி எண்களை அறிவித்த பேரிடர் மேலாண்மை ஆணையம்..!

சென்னை உள்பட பல இடங்களில் கடல் சீற்றம்.. திருச்செந்தூரில் மட்டும் உள்வாங்கிய கடல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments