Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீதியும் செங்கோலும் கீழே சாய்ந்து விட்டன ..பேரறிவாளன் விடுதலை குறித்து காங்., தலைவர் கே.எஸ்.அழகிரி கருத்து

Webdunia
வியாழன், 19 மே 2022 (22:11 IST)
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டவர் பேரறிவாளன். பின்னர் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. பின்னர் தற்போது உச்சநீதிமன்றம் அவரை விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழ்நாடு காங்கிரஸ் காரிய கமிட்டி, விடுதலை செய்யப்பட்டாலும் செய்த குற்றம் செய்ததுதான் என கருத்து தெரிவித்துள்ளதுடன், இன்று பேரறிவாளன் விடுதலையை எதிர்த்து தமிழகம் முழுவதும் பல பகுதிகளில் வாயை வெள்ளை துணியால் மூடிக்கொண்டு அறப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மதுரை தமுக்கம் மைதானத்தில் உள்ள நேரு சிலை முன்பாகவும் காங்கிரஸார் அறப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி இதுகுறித்து கூறியுள்ளதாவது:   ராஜீவ் காந்தி கொலை வழக்கில் உச்ச நீதிமன்றம் அந்த ஏழு பஎரையும் குற்றவாளிகள் என அறிவித்தது.  ஆனால் இன்றைக்கு உச்ச நீதிமன்றம் பேரறிவாளனை மட்டும் விடுதலை செய்துள்ளது.

பேரறிவாளன் ஒரு தமிழன் என்பதால் அவரை விடுதலை செய்ய வேண்டுமென பெரும்பாலானோர் கூறுகின்றனர். ஒரு தமிழன் குற்றத்திற்கு உள்ளானால் அவரை விடுதலை செய்துவிடலாம் என்பது நியாயமா? இன்று நீதியும் செங்கோலும் கீழே சாய்ந்து விட்டன என்பது என்னுடைய கருத்து எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வடமாநிலத்திற்கு தப்பிச் சென்றுவிட்டாரா முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்? சிபிசிஐடி விரைவு

இந்தியா கூட்டணி சபாநாயகர் வேட்பாளருக்கு ஆதரவு இல்லை: மம்தா பானர்ஜி அதிரடி..!

திடீரென டெல்லி கிளம்பிய ஆளுனர் ஆர்.என்.ரவி.. விஸ்வரூபம் எடுக்கும் கள்ளச்சாராய விவகாரம்..!

விஷச்சாராயம் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு: ஜிப்மர் மருத்துவமனையில் ஒருவர் மரணம்..

சூரஜ் ரேவண்ணா மீது மேலும் ஒரு பாலியல் வழக்கு.. ஓரின சேர்க்கைக்கு அழைத்ததாக புகார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments