Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

செவிலியர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த ஜூலி

Advertiesment
julie
, புதன், 29 நவம்பர் 2017 (14:52 IST)
சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில் கடந்த மூன்று நாட்களாக செவிலியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருவது தெரிந்ததே. இந்த நிலையில் இன்று முதல் போராட்டம் நடத்தி வரும் செவிலியர்கள் உண்ணாவிரதமும் இருந்து வருகின்றனர்.
 
இந்த நிலையில் செவிலியர்கள் போராட்டம் உச்சகட்டத்தில் உள்ள நிலையில் பிக்பாஸ் புகழ் ஜூலி நேரில் வந்து போராட்டம் செய்து வரும் செவிலியர்களுக்கு ஆதரவு கொடுத்துள்ளார்.
 
இந்த போராட்டம் குறித்து ஜூலி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: , 'ஒரு சாதாரண கூலி வேலை செய்பவர்களுக்கு கூட தினக்கூலியாக ரூ.500 கொடுக்கப்படுகிறது. ஆனால் செவிலியர் பணி செய்பவ்ர்களுக்கு வெறும் ரூ.250 மட்டுமே தினசரி சம்பளமாக கிடைக்கின்றது. ஒரு சராசரி மனிதனுக்கு இந்த தொகை மிகவும் குறைவு' இவ்வாறு ஜூலி கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜெ.வின் பெண் குழந்தைக்கு சோமன்பாபுவே தந்தை - உறவினர் லலிதா பரபரப்பு பேட்டி