பேராசிரியை நிர்மலாதேவிக்கு எதிரான வழக்கு: நீதிபதிகள் கேள்வியால் பரபரப்பு..!

Mahendran
வியாழன், 18 ஏப்ரல் 2024 (13:25 IST)
மாணவிகளை தவறாக வழிநடத்த முயற்சித்ததாக பேராசிரியை நிர்மலாதேவிக்கு எதிராக மாணவிகள் அளித்த புகாரை, விசாகா குழுவுக்கு அனுப்பாதது ஏன்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
பாதிக்கப்பட்ட மாணவிகளின் புகாரை 6 ஆண்டுகள் கடந்தும் விசாகா குழுவுக்கு அனுப்பாதது ஏன்? என்பது குறித்து ஜூன் 7ம் தேதிக்குள் விளக்கமளிக்க  அருப்புக்கோட்டை கல்லூரிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
பேராசிரியை நிர்மலாதேவிக்கு எதிரான வழக்கை, பெண் டி.ஐ.ஜி. தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க கோரிய வழக்கில் இந்த உத்தரவு இன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் மாணவிகளை தவறாக வழிநடத்த முயற்சித்ததாக பேராசிரியை நிர்மலாதேவி மீதான வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் ஏப்ரல்  26ஆம் தேதி கீழமை நீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக மெளனமாக இருப்பது ஏன்? தவெக நிர்வாகி கருத்து..!

பாமக நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்.. தவெகவுக்கு நேரில் சென்று அழைப்பு..!

விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி.. தவெக தீர்மானம்..!

எதிர்பார்த்தபடியே SIR படிவம் சமர்பிக்க அவகாசம் நீட்டிப்பு! எத்தனை நாட்கள்?

ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை விட்டுக்கு அழைத்து சென்ற இளைஞர்.. பெற்றோர் சம்மதத்துடன் திருமணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments