30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

Siva
வியாழன், 5 ஜூன் 2025 (18:25 IST)
பிரபல பத்திரிகையாளர் மணி சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறிய கருத்துகள் தற்போது அரசியல் வட்டாரத்தில் விவாதமாகி வருகின்றன. 
 
1996-ஆம் ஆண்டு, ஜெயலலிதா முதல்வராக இருந்த போது, அவர் வீட்டை விட்டு வெளியே வருவதற்கு  ஒருமணி நேரத்திற்கு முன்பே டிராபிக் நிறுத்தப்பட்டதாகவும், இதனால் பொதுமக்கள் கடும் சிக்கல்களை சந்தித்ததாகவும் அவர் நினைவூட்டினார்.
 
இப்போது, அதே பாணியில் தமிழக முதலவர் ஸ்டாலின் ‘ரோட் ஷோ’ நடத்துவதாக கூறி, நகரப் போக்குவரத்தை தடைபடுத்துகிறார் என அவர் விமர்சனம் செய்துள்ளார்.
 
30 வருடங்களுக்கு முன் ஜெயலலிதா செய்த தவறையே தற்போது ஸ்டாலின் செய்கிறார் என்றும், இதற்கெல்லாம் ஒரு காரணம் விஜய்யை கண்டு அச்சம் தான் ஏற்படுகிறது எனவும், இதற்குப் பின்னணி வேறு ஒன்றில்லை என்றும், நடிகர் விஜய் தனது ரோட்ஷோவில் பெற்ற ஆதரவை பார்த்து கலக்கம் அடைந்த திமுக, அதற்கு பதிலடியாக இதைப் போன்று ஜனக்கூட்டம் காண்பிக்கும் நிகழ்வுகளை நடத்தி வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
 
மக்கள் ஆதரவை நிரூபிப்பதற்கான முறையான வழியல்ல இது என்றும், இந்த அணுகுமுறை தவறானது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இளங்கலை, முதுகலை மாணவர்களுக்கு உயர்கல்வி உதவித்தொகை: விண்ணப்பிக்க என்ன செய்ய வேண்டும்?

உச்சம் சென்ற வெள்ளி விலையில் திடீர் சரிவு.. தங்கத்தின் நிலவரம் என்ன?

அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? டிசம்பர் 24-ல் அறிவிப்பு: ஓபிஎஸ் தகவல்; பாஜக சமரசம் எடுபடவில்லையா?

கேரள நடிகை பாலியல் வழக்கு: 6 குற்றவாளிகளுக்கு தண்டனை அறிவிப்பு.. எத்தனை ஆண்டு சிறை?

அமைதிக்கான நோபல் பரிசு வென்ற நர்கிஸ் முகமதி கைது: ஈரான் அரசு அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments