Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பணம் கொடுத்தா சீட்டு... ஜோதிமணி அப்செட்!!

Advertiesment
பணம் கொடுத்தா சீட்டு... ஜோதிமணி அப்செட்!!
, சனி, 13 மார்ச் 2021 (15:39 IST)
பணம் கொடுத்தால் யார் வேண்டுமானாலும் சீட் பெற முடியும் என்பது அக்கிரமம் கரூர் காங்கிரஸ் எம்.பி.ஜோதிமணி அதிருப்தி. 

 
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன என்பது தெரிந்ததே. பொன்னேரி, திருபெரும்புதூர், ஊத்தங்கரை, ஓமலூர், உதகமண்டலம், கோவை தெற்கு, காரைக்குடி, மேலூர், சிவகாசி, திருவைகுண்டம், குளச்சல், விளவங்கோடு, கிள்ளியூர், ஈரோடு கிழக்கு, தென்காசி, அறந்தாங்கி, விருத்தாச்சலம், நாங்குநேரி, கள்ளக்குறிச்சி, திருவில்லிப்புத்தூர், திருவாடானை, உடுமலைப்பேட்டை, மயிலாடுதுறை, வேளச்சேரி ஆகிய தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. 
 
 இந்த தொகுதியில் போட்டியிடப்போகும் வேட்பாளர்கள் யார் என தகவல் வெளியாகாத நிலையில், காங்கிரஸ் எம்.பி. விஷ்ணு பிரசாத், சென்னையில் உள்ள காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் தனது ஆதரவாளர்களுடன் திடீர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுப்பட்டார். அதாவது, கட்சியில் இருந்து வெளியேறி மீண்டும் இணைந்தவர்களுக்கு சீட் கொடுக்க முடிவு செய்திருப்பதாக கூறி அவர் உண்ணாவிரதத்தில் ஈடுப்பட்டுள்ளார். 
 
இதனைத்தொடர்ந்து பணம் கொடுத்தால் யார் வேண்டுமானாலும் சீட் பெற முடியும் என்பது அக்கிரமம் என கரூர் காங்கிரஸ் எம்.பி.ஜோதிமணி அதிருப்தி தெரிவித்துள்ளார். மேலும், காங்கிரஸில் வேட்பாளர் தேர்வு வெளிப்படையாக இல்லை, கட்சியில் உள்ள சில தவறுகளை தட்டிக்கேட்கிறேன். ஆனால், அதற்கு பதில் இல்லை என அதிருப்தி தெரிவித்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அதிக வாரிசுகளை இறக்கிய கட்சி நாம் தமிழர் - ராஜீவ்காந்தி விமர்சனம்!