Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசியலில் நட்பும் இல்லை, பகையும் இல்லை.. திமுக கூட்டணிக்கு துண்டு போடும் ஜான்பாண்டியன்..!

Siva
செவ்வாய், 13 பிப்ரவரி 2024 (06:38 IST)
திமுக கூட்டணியில் ஏற்கனவே பல கட்சிகள் இருக்கும் நிலையில் ஜான்பாண்டியனின்  தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் இணைய வாய்ப்பிருப்பதாக புறப்படுகிறது.

பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறிய பின்னர் திமுக கூட்டணியில் இருந்து சில கட்சிகள் அதிமுகவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஏற்கனவே அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிக பாமக உள்ளிட்ட கட்சிகள் கூட அதிமுகவுடன் கூட்டணி வைக்க தற்போது தயங்கி வருவது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் அதிமுக மற்றும் பாஜக இணைந்து செயல்பட வேண்டும் என்றும் அந்த கூட்டணியில் தான் தங்களுடைய தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் இருக்கும் என்றும் ஜான் பாண்டியன் கூறி இருந்தார்.  இந்த நிலையில் தற்போது அதிமுக மற்றும் பாஜக கூட்டணி அமைய வாய்ப்பே இல்லை என்ற நிலையில் அவருடைய நிலை என்ன என்ற கேள்வி எழுந்தது .

இந்த நிலையில் திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணியில் சேர மாட்டோம் என்று சொல்ல முடியாது, அரசியலில் நட்பும் இல்லை பகையும் இல்லை, இன்னும் சில நாட்களில் எந்த கூட்டணியில் இணைவது என்று கூறுவோம் என திமுக கூட்டணிக்கும் ஜான்பாண்டியன் துண்டு போட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 மாவட்டங்களில் இன்று இரவு கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் எச்சரிக்கை..!

பதவியேற்பின்போது பாலஸ்தீனத்தை ஆதரித்து முழக்கம்.. ஒவைசி தகுதி நீக்கம் செய்யப்படுகிறாரா?

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் தலைமறைவு.. என்ன நடந்தது?

வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளை தடுக்க கூடாது: உச்சநீதிமன்றம் உத்தரவு..!

திமுகவும் இடைத்தேர்தலை புறக்கணித்துள்ளது: முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments