Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சசிகலா எனது ஆட்சியையே கவிழ்த்து விடுவார்: மோடியிடம் கதறிய ஜெயலலிதா!

சசிகலா எனது ஆட்சியையே கவிழ்த்து விடுவார்: மோடியிடம் கதறிய ஜெயலலிதா!

Webdunia
புதன், 31 மே 2017 (15:57 IST)
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஒரு தைரியமான பெண், மிகச்சிறந்த ஆளுமை, புத்திசாலி என பலர் கூறினாலும் அவரது மிக்ச்சிறந்த பலவீனமாக சசிகலாவை பலரும் கூறுவர். ஏன் சசிகலாவை ஜெயலலிதாவால் விடமுடியவில்லை. அவரால் ஜெயலலிதாவுக்கு பல சறுக்கல்கள் ஏற்பட்டன என பலரும் கூறுவதுண்டு.


 
 
என்ன காரணத்துக்காக ஜெயலலிதாவால் சசிகலாவின் கோட்டை தாண்டி வரமுடியவில்லை. ஜெயலலிதாவுக்கும் மற்றவர்களுக்கும் இடையே ஒரு இரும்பு திரையாக சசிகலா விளங்கினார் என பலரும் கூறியதுண்டு. இதற்கு பதில் அளிக்கும் விதமாக தற்போது ஒரு தகவல் இணையத்தில் வலம் வருகிறது.
 
கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஓபிஎஸ் அணியை தொடர்ந்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் மோடியை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது பிரதமர் மோடி எடப்பாடி பழனிச்சாமியிடம் சில நிமிடங்கள் பேசினார்.
 
இந்த சந்திப்பின் போது சசிகலாவின் ஆதிக்கம் அதிமுகவில் தற்போதும் இருப்பதாக எடப்பாடி பழனிச்சாமியிடம் மோடி கடிந்து கொண்டதாக கூறப்படுகிறது. மேலும் சசிகலா பற்றி முன்னதாகவே ஜெயலலிதா தன்னிடம் கூறியதாக மோடி கூறியுள்ளார்.
 
அதில், சசிகலா நினைத்தால் எனது ஆட்சியையே கவிழ்த்து விடுவார் என ஜெயலலிதா தன்னிடம் கூறி வருந்தியதாக மோடி எடப்பாடி பழனிச்சாமியிடம் கூறியதாக தகவல்கள் வருகின்றன. இதனால் தான் ஜெயலலிதாவால் சசிகலாவை தள்ளி வைக்க முடியவில்லை என கூறப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் உச்சத்திற்கு சென்ற தங்கம் விலை.. சவரன் ரூ.65 ஆயிரத்தை நெருங்கியது..!

ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கு மீண்டும் அரசு வேலையா? எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

பாகிஸ்தான் ரயில் கடத்தல்! பயங்கரவாதிகளை கொன்று பயணிகள் மீட்பு! - எல்லையில் பரபரப்பு!

நாடு கடத்தப்பட்ட போதிலும் மீண்டும் சட்டவிரோதமாக குடியேற்றம்.. 3 பேர் கைது..!

ஹோலி அன்னைக்கு பர்தா போட்டு மூடிக்கோங்க! இஸ்லாமியர்களுக்கு பாஜக பிரபலம் அறிவுரை!

அடுத்த கட்டுரையில்
Show comments