Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஜெயலலிதாவின் முதலாமாண்டு நினைவு தினம்...

Advertiesment
ஜெயலலிதாவின் முதலாமாண்டு நினைவு தினம்...
, செவ்வாய், 5 டிசம்பர் 2017 (12:51 IST)
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று நாடெங்கும் அனுசரிக்கப்படுகிறது.


 
சென்னை அப்போலோ மருத்துவமனையில் ஜெ. அனுமதிக்கப்பட்டது முதல் தற்போது வரை அவரின் மரணத்தில் மர்மமே நீடிக்கிறது. அதற்கு முக்கிய காரணம், அவர் மருத்துவமனையில் இருந்த போது எடுக்கப்பட்ட புகைப்படமோ அல்லது வீடியோவோ இதுவரை வெளியாகவில்லை என்பதுதான். 
 
உடல் நலக்குறைபாடு ஜெயலலலிதா  காரணமாக 22.09.2016 அன்று இரவு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு காய்ச்சல், நீர்ச்சத்து குறைபாடு இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் கூறியது. அதன்பின் தொடர்ந்து அவருக்கு பல மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். சசிகலா மற்றும் மருத்துவர்கள் தவிர யாருக்கும் ஜெ.வை சந்திக்க அனுமதி அளிக்கப்படவில்லை.

webdunia

 

 
அமைச்சர்களும் மருத்துவமனை முதல் தளத்திலேயே காத்துக்கிடந்தனர். அப்போதைய ஆளுநர் வித்யாசாகர் ராவ்,   ராகுல்காந்தி உட்பட பல அரசியல் தலைவர்கள் சசிகலாவை மட்டும் சந்தித்து விட்டு சென்றதாக கூறப்பட்டது. எய்ம்ஸ் மருத்துவர்கள், வெளிநாட்டு மருத்துவர்கள் என பலரும் சிகிச்சை அளித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி கடந்த டிச.5ம் தேதி மரணமடைந்தார்.  
 
அவரின் முதலமாண்டு நினைவு தினம் இன்று அதிமுகவினரால் நாடெங்கும் அனுசரிக்கப்படுகிறது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் கருப்பு சட்டை அணிந்து, ஜெ.வின் சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தினர். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உன் கடனை அடைக்கிறேன் ; தேர்தலில் போட்டியிடு : விஷாலிடம் கூறினாரா தினகரன்?