அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிழல் முதலமைச்சர் போல் செயல்படுகிறார் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுகவை பொருத்தவரை உழைப்பவர்களுக்கு எப்போதும் அங்கீகாரம் கிடைக்காது என்றும் குடும்ப வாரிசுகளுக்கு மட்டுமே அங்கீகாரம் கிடைக்கும் என்று கூறிய ஜெயக்குமார் தற்போது நிழல் முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் இருந்து வருகிறார் என்றும் துணை முதலமைச்சர் பதவியை என்னை கேட்டால் துரைமுருகனுக்கு வழங்கலாம் என்று தெரிவித்தார்.
புதிய தலைமைச் செயலகம் திமுக ஆட்சியில் கட்டப்பட்டது, ஆனால் உள்ளே சென்று பார்த்தால் அதை சர்க்கஸ் கூடாரம் பிரிப்பது போல் இருந்தது என்றும், அதன் பிறகு தான் அதிமுக ஆட்சியில் அது பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்பட்டது என்றும் கேள்வி ஒன்றுக்கு தெரிவித்தார்.
கடந்த மூன்று ஆண்டுகளாக அம்மா உணவகம் பற்றி கண்டுகொள்ளாத முதலமைச்சர் திடீரென அம்மா உணவகத்தில் ஆய்வு செய்து நாடகம் ஆடுகிறார் என்றும் பொதுத்தேர்தல் வருவதால் இந்த செயலில் அவர் ஈடுபட்டு உள்ளார் என்றும் தாலிக்கு தங்கம் திட்டம் உள்பட பல அதிமுக அரசின் திட்டங்களை திமுக அரசு நிறுத்தி உள்ளது என்றும் தெரிவித்தார்.
திமுகவின் மூன்றாண்டு ஆட்சியில் பால் விலை, சொத்து விலை, மின்கட்டணம் அளவுக்கு மீறி உயர்த்தி பொதுமக்களை ஏமாற்றி வருகிறது என்றும் அவர் குற்றம் சாட்டினார்..