Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

துணை முதல்வர் பதவியா.? நச் பதில் கொடுத்த உதயநிதி..!

Advertiesment
Udaya Nithi

Senthil Velan

, சனி, 20 ஜூலை 2024 (13:00 IST)
தனக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட இருப்பதாக ஊடகங்களில் வரும் தகவல் வதந்தியே என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மறுப்பு தெரிவித்துள்ளார்.
 
திமுக இளைஞரணியின் 45-வது தொடக்க விழா சென்னை தேனாம்பேட்டையில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 
 
இந்த நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி ஸ்டாலின், நான் துணை முதலமைச்சராக போகிறேன் என பத்திரிகைகளில் கிசுகிசுக்களும், வதந்திகளும் வந்துள்ளதாகவும், அதனை நம்பி, நாமும் அந்த இடத்திற்கு துண்டு போட்டு வைப்போம் என்ற பெயரில் எனக்கு துணை முதல்வர் பதவி வழங்க வேண்டும் என இளைஞர் அணியினர் தீர்மானம் நிறைவேற்றி உள்ளதாகவும் தெரிவித்தார்.

 
அந்த செய்தி வெறும் வதந்தி தான் என குறிப்பிட்ட உதயநிதி, எல்லா அமைச்சர்களும் முதல்வருக்கு துணையாக தான் இருப்போம் என்றும் எந்தப் பொறுப்பு வந்தாலும் இளைஞரணியை மறக்க மாட்டேன் என்றும் இளைஞரணி செயலாளர் பதவி எனது மனதுக்கு மிகவும் நெருக்கமானது என்றும் கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மைக்ரோசாப்ட் பிரச்சனைக்கு சைபர் தாக்குதல் அல்ல.! கிரவுட்ஸ்ட்ரைக் நிறுவனம் விளக்கம்..!!