பாஜகவுடன் திமுக ரகசிய உறவு வைத்துள்ளதால் மத்தியக்குழு பாராட்டியுள்ளது: ஜெயக்குமார்

Webdunia
வியாழன், 14 டிசம்பர் 2023 (17:47 IST)
சென்னையில் ஏற்பட்ட வெள்ள சேதத்தை  ஆய்வு செய்ய வந்த குழு தமிழக அரசு  வெள்ள நிவாரண பணியை சிறப்பாக செய்தது என்று கூறிய நிலையில் இதற்கு கருத்து தெரிவித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பாஜகவுடன் திமுக ரகசிய உறவு வைத்துள்ளதால் மத்திய குழு பாராட்டி உள்ளது என்று தெரிவித்தார்.  
 
சென்னை உள்பட நான்கு மாவட்டங்களில் புயல் காரணமாக கனமழை, பெரு வெள்ளம் ஏற்பட்டது என்பதும் இதனால் நான்கு மாவட்டங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது என்பதையும் பார்த்தோம். 
 
வெள்ள சேதத்தை மதிப்பிட மத்திய குழு கடந்த இரண்டு நாட்களாக ஆய்வு செய்த நிலையில் ஆய்வுக்கு பின் தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களையும் சந்தித்தது.  வெள்ள நிவாரண பணிகள் குறித்து கருத்து தெரிவித்த ஆய்வு குழுவின் தலைவர் தமிழக அரசின் பணியை பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திமுக, பாஜக உடன் ரகசிய உறவு வைத்துள்ளது இதன் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதும் அதனால் தான் மத்திய குழு திமுக அரசை பாராட்டியுள்ளது என்றும் தெரிவித்துள்ளார் 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாமதுரைக்கு தேவை வளர்ச்சி அரசியலா அல்லது அரசியலா? முதல்வர் ஸ்டாலின் கேள்வி..!

500 இண்டிகோ விமானங்கள் ரத்தானதால் பயணிகள் ஆத்திரம்.. ஏர் இந்தியா விமானத்தை மறித்து போராட்டம்..!

திருப்பரங்குன்றம் விவகாரம் நாடாளுமன்றத்தில் ஒலிக்குமா? திமுக நோட்டீஸ்

தவெகவில் இணைந்தாலும் ஜெயலலிதாவை மறக்காத செங்கோட்டையன்.. நினைவு நாள் பதிவு..!

மோடி இந்தியாவுக்கு கிடைத்திருப்பது இந்தியர்களின் அதிர்ஷ்டம்: புதின் புகழாரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments