Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரணவ் ஜுவல்லரி உரிமையாளரின் மனைவி கார்த்திகா கைது.. ரூ.100 கோடி மோசடி வழக்கு..!

Webdunia
வியாழன், 14 டிசம்பர் 2023 (16:59 IST)
ரூபாய் 100 கோடிக்கு மேல் மோசடி செய்ததாக கூறப்பட்ட பிரணவ் ஜுவல்லரி உரிமையாளர் மதன் செல்வராஜ் என்பவர் ஏற்கனவே சரண் அடைந்துள்ள நிலையில் தற்போது அவருடைய மனைவி கார்த்திகா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். 
 
சட்ட விரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக பிரணவ் ஜுவல்லரி  மீது அமலாக்க துறையினர் வழக்கு பதிவு செய்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் அந்த கடைக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடந்தது. இதில் கிலோ கணக்கில் நகை ரொக்கம் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டது. 
 
இந்த நிலையில் பிரணவ் ஜுவல்லரி  உரிமையாளர் மதன் செல்வராஜ் மற்றும் அவரது மனைவி கார்த்திகா மீது வழக்கு பதிவு செய்திருந்த நிலையில் இருவரும் தலைமறைவாகினார். 
 
சமீபத்தில் பிரணவ் ஜுவல்லரி உரிமையாளர் மதன் செல்வராஜ் நீதிமன்றத்தில் சரணடைந்தார். இதனை அடுத்து அவரது மனைவி கார்த்திகாவும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஸ்வகர்மா திட்டத்தை தமிழ்நாடு நிராகரிக்கும்! - அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதி!

50 கோடி ரூபாய்க்கு நாய் வாங்கிய பெங்களூர் நபர்! உலகின் விலை உயர்ந்த நாயிடம் என்ன ஸ்பெஷல்?

பேரூர் ஆதீனத்தில் துவங்கிய “ஒரு கிராமம் ஒரு அரச மரம்” திட்டம்! - தமிழகத்தின் அனைத்து கிராமங்களிலும் செயல்படுத்த இலக்கு!

ஸ்டாலின் வைத்த குற்றச்சாட்டு.. சட்டசபை பதிலுரையை புறக்கணித்த வேல்முருகன்!

பட்டப்பகலில் பட்டாக்கத்தி வீசிய கும்பல்! பிரபல ரவுடி கொடூரக் கொலை! - காரைக்குடியில் அதிர்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments