கண்டவனுக்கும் பதில் சொல்ல முடியாது! – சக அதிமுக பிரமுகரை பேசிய ஜெயக்குமார்!

Webdunia
வியாழன், 16 ஜூன் 2022 (13:07 IST)
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குறித்து கோவை செல்வராஜ் பேசிய நிலையில் அதுகுறித்து ஜெயக்குமார் அளித்த பதில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுகவில் ஒற்றை தலைமை தேவை என்ற கோரிக்கை எழுந்துள்ள நிலையில் சமீப காலமாக எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர்செல்வம் தனித்தனியாக தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து சமீபத்தில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், விரைவில் அதிமுக ஒற்றை தலைமையின் கீழ் செயல்படும் என பேசியிருந்தார். மேலும் பல அதிமுக பிரபலங்களும் ஒற்றை தலைமை குறித்து பேசி வருவது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் ஜெயக்குமார் கட்சி உள்விவகாரங்களை பொதுவெளியில் பேசியது தவறு என்று கோவை செல்வராஜ் தனது பேட்டியில் தெரிவித்திருந்தார்.

தற்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஜெயக்குமார் திட்டமிட்டபடி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என பேசினார். அப்போது கோவை செல்வராஜ் கருத்து குறித்து கேட்டபோது “தெருவில் போற கண்டவனுக்கும் பதில் சொல்ல முடியாது” என்று பேசியுள்ளார். இதனால் அதிமுகவிற்கு சலசலப்பு எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக மெளனமாக இருப்பது ஏன்? தவெக நிர்வாகி கருத்து..!

பாமக நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்.. தவெகவுக்கு நேரில் சென்று அழைப்பு..!

விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி.. தவெக தீர்மானம்..!

எதிர்பார்த்தபடியே SIR படிவம் சமர்பிக்க அவகாசம் நீட்டிப்பு! எத்தனை நாட்கள்?

ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை விட்டுக்கு அழைத்து சென்ற இளைஞர்.. பெற்றோர் சம்மதத்துடன் திருமணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments