Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

காலா முதல் காட்சிக்காக சென்னை வந்த ஜப்பான் ரசிகர்கள்....

Advertiesment
காலா முதல் காட்சிக்காக சென்னை வந்த ஜப்பான் ரசிகர்கள்....
, வியாழன், 7 ஜூன் 2018 (13:35 IST)
நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள காலா படத்தை முதலில் பார்க்க ஜப்பான் தம்பதியினர் சென்னை வந்துள்ளனர்.

 
நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள காலா திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியானது. தமிழகத்தின் பல தியேட்டர்களில் அதிகாலை 5.30 மற்றும் 6.30 மணியளவில் முதல் காட்சி திரையிடப்பட்டது. இந்த காட்சியை ரஜினி ரசிகர்கள் கண்டுகளித்தனர். மேலும், படம் நன்றாக இருப்பதாகவும் இணையதளங்களில் அவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 
இந்நிலையில், காலா படத்தை பார்க்க ஜப்பான் தம்பதியினர் சென்னை வந்துள்ளனர். அவர்களிடம் செய்தியாளர்கள் பேட்டியெடுத்த போது, தாங்கள் ரஜினியின் தீவிர ரசிகர்கள் எனவும் சீனாவில் வருகிற 10ம் தேதி இப்படம் வெளியாகிறது. ஆனால், அதுவரை பொறுக்க முடியாது. எனவே முதல் நாள் முதல் காட்சி பார்ப்பதற்காக சென்னை வந்துள்ளோம். இதற்கு முன் எந்திரன், கோச்சடையான், கபாலி படங்களையும் சென்னை வந்து பார்த்து ரசித்தோம். 
 
இன்று காலை ரோகிணி தியேட்டரில் முதல் காட்சி, அதன் பின் காசி தியேட்டரில் ஒரு காட்சி, அடுத்து எழும்பூரில் ஆல்பர் தியேட்டரில் அடுத்த காட்சி என தொடர்ச்சியாக இப்படத்தை பார்த்துக்கொண்டே இருப்பதாக கூறினார்கள். 
 
மேலும், ‘வேங்க மவன் ஒத்தையில நிக்கேன். தில்லிருந்தா மொத்தமா வாங்கல’ என்கிற ரஜினியின் பஞ்ச் வசனத்தையும் அவர் பேசிக்காட்டினார். அதேபோல் அவரின் மனைவி ‘கதம் கதம்’ என பேசிக்காட்டினார்.
 
ரஜினிக்கு ஜப்பான் நாட்டில் பல ரசிகர்கள்கள் இருக்கிறார். அவரின் பெரும்பாலான படங்கள் அங்கு திரையிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பியுகோ எரிமலை வெடிப்பு: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 99 ஆக உயர்வு