Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜனவரி 17ஆம் தேதியும் விடுமுறை: தமிழக அரசின் அறிவிப்பால் பொதுமக்கள் மகிழ்ச்சி..!

Siva
ஞாயிறு, 5 ஜனவரி 2025 (08:44 IST)
தமிழ்நாட்டில் பொங்கல் விடுமுறை ஏற்கனவே 14 முதல் 16ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது 17ஆம் தேதியும் விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து 14 முதல் 19ஆம் தேதி வரை தொடர் விடுமுறை கிடைக்கும் என்பதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து வெளியான அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

இவ்வாண்டு தமிழ்நாட்டில் 14.01.2025 செவ்வாய்கிழமை அன்று தைப்
பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவதாலும், 15.01.2025, 16.01.2025, 18.01.2025 மற்றும் 19.01.2025 ஆகியவை அரசு விடுமுறை நாட்கள் என்பதாலும் மாணவர்கள் அவர்தம் பெற்றோர்கள். ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் தங்களது சொந்த ஊருக்குச் சென்று பண்டிகையை மகிழ்வுடன் கொண்டாடும் வகையில், அதற்கு இடைப்பட்ட நாளான 17.01.2025 (வெள்ளிக்கிழமை) அன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்குமாறு பலதரப்பிலிருந்து அரசுக்கு கோரிக்கைகள் வரப்பெற்றன.

அக்கோரிக்கைகளை ஏற்று, மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், மாணவர்கள்,
அவர்தம் பெற்றோர்கள். ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் தங்களது சொந்த ஊர் சென்று பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வகையில், 17.01.2025 (வெள்ளிக்கிழமை) அன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள். பள்ளிகள். கல்லூரிகள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளித்தும், அவ்விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், 25.01.2025 (சனிக்கிழமை) அன்று பணி நாளாக அறிவித்தும் உத்தரவிட்டுள்ளார்.


Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சீனாவில் வேகமாக பரவும் வைரஸ்.. கேரளாவில் தீவிர கண்காணிப்பு..!

முதல்வரை சீண்டி பார்ப்பதா? பாலகிருஷ்ணனுக்கு திமுக கண்டனம்..!

அமலாக்கத்துறை சோதனை எதிரொலி: ED.. திடீரென டெல்லி புறப்பட்டு சென்ற அமைச்சர் துரைமுருகன்

ஜனவரி 17ஆம் தேதியும் விடுமுறை: தமிழக அரசின் அறிவிப்பால் பொதுமக்கள் மகிழ்ச்சி..!

தக்காளி விலை படுவீழ்ச்சி.. 50 ரூபாய்க்கு 4 கிலோ.. இல்லத்தரசிகள் மகிழ்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments