ஆண்டுதோறும் சர்வதேச அளவில் கிரிக்கெட்டில் சிறந்து விளங்குபவர்களுக்கு கேல் ரத்னா உள்ளிட்ட விருதுகளை அளித்து மத்திய அரசு கௌரவித்து வருகிறது.
இந்நிலையில் இந்த ஆண்டு கேல் ரத்னா விருது ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்களை வென்ற மனு பாக்கர், உலக செஸ் சாம்பியன் குகேஷ், இந்திய ஹாக்கி அணிக் கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங், பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற ப்ரவீன் குமார் ஆகியோருக்கு அளிக்கப்பட்டுள்ளது.
அதே போல அர்ஜுனா விருது பாரா பேட்மிண்ட்டன் வீராங்கனைகளான துளசிமதி முருகேசன் மற்றும் நித்யஸ்ரீ சுமதி சிவன் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதுகளை ஜனவரி 17 ஆம் தேதி ஜனாதிபதி திரௌபதி முர்மு அவர்கள் கைகளில் இருந்து வீரர்கள் பெற உள்ளனர்.