Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

திமுகவின் ஆயுதமா விஜய்? சர்கார் பின்னணியில் உள்ள அரசியல் யாருடையது?

திமுகவின் ஆயுதமா விஜய்? சர்கார் பின்னணியில் உள்ள அரசியல் யாருடையது?
, புதன், 3 அக்டோபர் 2018 (19:28 IST)
சர்கார் படத்தின் இசை வெளியீடு நேற்று சென்னையில் நடைபெற்றது. அப்போது பேசிய விஜய் தனது அரசியல் பிரவேசத்திற்கு அடிபோட்டார் என கூறப்படுகிறது. உண்மையில் இந்த அரசியல் விஜய்க்கானதா அல்லது திமுகவிற்கானதா என கேள்வி எழுந்துள்ளது. 
 
இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது அவராக பேசியது அல்ல, எழுதிக்கொடுக்கப்பட்டு பேசப்பட்டது என ஒரு சிலர் கூறி வரும் நிலையில், நேற்று பேசும் போது விஜய் தனது வழக்கமான மேனரிசத்தை விட்டு சற்று வித்தியாசமகவே காணப்பட்டார். 
 
ஆளும் கட்சியை அவர் விமர்சித்ததும், தலைவன் சரியாக இருக்க வேண்டும் என்று குட்டி கதை கூறியதும் அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு ஏற்ப அதிமுக அமைச்சர்களும் விஜய்யின் பேச்சுக்கு கண்டங்களை தெரிவித்துள்ளனர். 
 
ஆனால், விஜய்யின் இந்த பேச்சு அவருக்கானதா? என்பது சந்தேகமாக உள்ளது. என்னத்தான் நான் முதலமைச்சர் ஆனால்... என கற்பனை பதில் கூறினாலும் திமுகவிற்காக விஜய் இவ்வாறு பேசினார் என ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர். 
webdunia

 
விஜய்க்கும் ஆளும் கட்சிக்கும் ஏற்கனவே தலைவா படம் முதல் மறைமுக மோதல் போக்கு இருப்பதால், சர்கார் மேடையில் திமுக இருக்கிறது என்ற தைரியத்தில் அவர் பேசியதாக கூறப்படுகிறது. 
 
ஆம், விஜய் பேசியதற்கு படத்தை வெளியிட தடை போட்டாலும் படத்தின் தயாரிப்பாளர் கலாநிதிமாறன் இதை பார்த்துக்கொள்வார், தான் எதிலும் தலையிட வேண்டிய அவசியம் இருக்காது என்ற கணக்கும் இருக்கிறதாம் விஜய்க்கு. 
 
அதாவது, தற்போது திமுக தலைவராக ஸ்டாலின் பொருப்பேற்றுள்ளார். இந்த நேரத்தில் சரியான தலைவர் வேண்டும் என விஜய் கூறுவது ஸ்டாலின் தலைமை ஏற்கவா? என கேட்க தோன்றுகிறது. 
 
யாருக்காக பேசினால் என்ன விஜய் கூறியது போல தமிழகத்தை வழி நடத்த நல்ல தலைவர் வந்தால் போதும்...

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

லட்டு மாதிரி செல்போனை விழுங்கிய கைதி மருத்துவமனையில் அனுமதி...