Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஈரான் - அமெரிக்க போர் பதற்றம்: மீண்டும் உச்சத்தில் தங்கத்தின் விலை!

Webdunia
புதன், 8 ஜனவரி 2020 (11:59 IST)
இதுவரை இல்லாத உச்சத்திற்கு உயர்ந்து தங்கத்தின் விலை மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.    
 
தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாகவே ஏற்றமும் இறக்கமுமாய் ஆட்டம் காட்டி வருகிறது. உலக அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலையாலும், பலர் தங்கத்தில் அதிகமாக முதலீடு செய்ய தொடங்கியதாலும் தங்கம் விலை ஏற்றத்தை சந்தித்து வருகிறது.     
 
இந்நிலையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ரூ.30,000-த்திற்குள் இருந்த நிலையில் தற்போது சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.538 உயர்ந்து ரூ.31,432க்கு விற்பனை செய்யப்படுகிறது.  
 
கடந்த ஒரு வாரத்தில் தங்கத்தின் விலை ரூ.1,552 உயர்ந்துள்ளது. ஈராக் மற்றும் அமெரிக்காவின் இடையே ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதை அடுத்து இந்த தாக்குதல் தற்போது தங்கத்தின் விலையிலும் எதிரொலித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

காங்கிரஸ் கட்சிக்கு 3 இலக்க வெற்றி கிடைக்காது: பிரசாந்த் கிஷோர் உறுதி..!

கரையை கடந்தது புயல்.. 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு இறக்கம்..!

50 டிகிரி செல்சியஸ் வெப்பம்.. வெப்ப அலை எதிரொலி: 144 தடை உத்தரவால் அமல்..!

கரையை கடக்க தொடங்கியது ரெமல்’ புயல்.. கொல்கத்தாவில் கனமாழி

நீதிபதி சுவாமிநாதன் மீது புகார்..! நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றத்திற்கு கொளத்தூர் மணி கடிதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments