Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி கரூர் மாவட்ட கிளை ஆண்டு மகாசபைக் கூட்டம்

Advertiesment
karur
, திங்கள், 26 செப்டம்பர் 2022 (22:51 IST)
கடந்த  சனிக்கிழமை மாலை கரூர்  மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவரின் அறிவுறுத்தல்கள் படி இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி கரூர் மாவட்ட கிளையின் ஆண்டு மகாசபைக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் ரெட் கிராஸ் மாவட்ட துணைத் தலைவர் பொறுப்பில் இருக்கும் மாவட்ட வருவாய் அலுவலர் உயர்திரு. லியாகத் அவர்கள் கலந்து கொண்டு ரெட் கிராஸ் தொண்டர்கள் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து சிறப்புரையாற்றினார்.ரெட்கிராஸ் செயலாளர் வில்லியம் அவர்கள் அனைவரையும் வரவேற்று பேசி ஆண்டறிக்கை வாசித்தார்.

ரெட் கிராஸ் ஆயுள் உறுப்பினர் சரண்யா வரவுசெலவு அறிக்கையை கூட்டத்தில் சமர்பித்து பேசினார்.மேலும் கூட்டத்தில்  ரெட் கிராஸ் செயல் கமிட்டிக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. தலைவராக இன்ஜினியர் ராமநாதன், துணை தலைவராக சேதுராமன், பொருளாளராக திருமூர்த்தி ஆகியோர் ரெட் கிராஸ் உறுப்பினர்களின் ஆதரவோடு ஏக மனதாக முன்மொழிந்து தேர்ந்தெடுக்கப்பட்டனர்.செயலாளர் வில்லியம்ஸ் புதிய நிர்வாகிகளை அறிமுகப்படுத்தி பயனாடை அணிவித்து தொடர்ந்து சேவையாற்ற வாழ்த்தினார். 
 
கூட்டத்தில் ரெட் கிராஸ் புரவலர்கள் உறுப்பினர் கள்  திரளாக கலந்து கொண்டனர்.நிறைவில் திருமூர்த்தி நன்றி கூறினார்.தேநீர் விருந்துடன் கூட்டம் நிறைவுற்றது.நன்றி

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

லெஸ்டரில் மதவெறி போராட்டங்கள் தீவிரம் அடைய தவறான தகவல்கள் காரணமா?