Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் ரெய்ட்: பிடியில் சிக்கும் ஸ்பெக்டரம் மால் மற்றும் சத்யம் சினிமாஸ்??

Webdunia
செவ்வாய், 28 நவம்பர் 2017 (18:15 IST)
சசிகலா உறவினர் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சமீபத்தில் வருமானவரி துறையினர் சோதனை நடத்தினர். இதை தொடர்ந்து ஸ்பெக்டரம் மால் மற்றும் சத்யம் சினிமாஸில் சோதனை நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
சத்யம் சினிமாஸ் குழுமத்தினரிடம் இருந்த ஜாஸ் சினிமாஸ், தனது அதிகாரத்தை பயன்படுத்தி சசிகலா குடும்பம் ரூ.1000 கோடிக்கு மிரட்டி வாங்கியது என்பது நீண்ட கால குற்றச்சாட்டு. 
 
இந்நிலையில், சத்யம் சினிமாஸ் திரையரங்க உரிமையாளர் வீடு உள்ளிட்ட 33 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியானது.  ஆனால், சத்யம் திரையரங்களில் எந்த சோதனையும் நடைபெறவில்லை என சத்யம் சினிமாஸ் மக்கள் தொடர்பாளர் சங்கீதா கந்தவேல் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
 
சத்யம் சினிமாஸ் அமைந்திருக்கும் பகுதியில் உள்ள ஸ்பெக்ட்ரம் மால் உரிமையாளர்கள் சிட்டிபாபு, செந்தில் வீடுகள், பட்டேல் குரூப், மிலன், கட்டுமான நிறுவனமான மார்க் போன்ற நிறுவனங்களில் சோதனை நடைபெற்று வருவது உறுதியாகியுள்ளது. 
 
33 இடங்கலில் 300க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இதில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், சசிகலா உறவினர்கள் இல்லத்தில் நடைபெற்ற சோதனைக்கும் இன்றைய சோதனைக்கும் தொடர்பு இல்லை என்று வருமான வரித்துறை விளக்கம் அளித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழக முதல்வர் குறித்து இவ்வளவு கொச்சையாக பேசுவதா.? சி.வி சண்முகத்திற்கு உச்சநீதிமன்றம் கண்டனம்.!!

திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திருவிழா எப்போது? கரகோஷத்துடன் நடப்பட்ட பந்தக்கால்..!

தஞ்சாவூர், சேலத்தில் மினி டைடல் பூங்கா.! காணொலி வாயிலாக திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்.!!

39 டாஸ்மாக் கடைகளை உடனே அகற்றுங்கள்: தமிழக அரசுக்கு ரயில்வே துறை கடிதம்..!

நாளை மத்திய வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழகத்திற்கு கனமழையா?

அடுத்த கட்டுரையில்
Show comments