Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை ஐ.ஐ.டி.யில் அடுத்தடுத்து மாணவர்கள் தற்கொலை: இன்று எச்.டி. மாணவர் பரிதாப பலி..!

Webdunia
ஞாயிறு, 2 ஏப்ரல் 2023 (14:53 IST)
சென்னை ஐஐடியில் இந்த ஆண்டிலேயே ஏற்கனவே இரண்டு மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில் இன்று இன்னொரு மாணவர் தற்கொலை செய்து கொண்டுள்ளது அவரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
சென்னை ஐஐடியில் மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த சச்சின் குமார் என்ற 32 வயது மாணவர் பிஹெச்டி படிப்பு படித்து வந்த நிலையில் திடீரென இன்று அவர் தற்கொலை செய்து கொண்டார். அந்த மாணவர் தற்கொலை செய்வதற்கு முன் வாட்ஸ் அப் வழியாக தனது தற்கொலை குறித்த தகவல்களை அவரது நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் அனுப்பி விட்டு தூக்கில் தொங்கியுள்ளார். 
 
இதனை அடுத்து உடனடியாக அவரை காப்பாற்றும் நோக்கத்தில் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்ட நிலையில் அவரை பரிசோதனை செய்ததில் அவர் உயிரிழந்து விட்டார் என்று கூறப்படுகிறது. 
 
ஏற்கனவே ஆந்திராவைச் சேர்ந்த பிஹெச்டி மாணவர் கடந்த மாதம் 14ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார் என்பதும் அதேபோல் பிப்ரவரி மாதம் பிஹெச்டி மாணவர் ஒருவர் சென்னை ஐஐடி வளாகத்தில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சீனாவை தொடர்ந்து துருக்கியிடம் வாங்கிய ட்ரோன்களும் பனால்! பாகிஸ்தானை இடது கையில் டீல் செய்யும் இந்தியா!

அறிவியல் பாடங்களில் அதிகரித்த முழு மதிப்பெண்கள்! என்ஜீனியரிங் கட் ஆப் உயர வாய்ப்பு!

மதவாத பிரச்னைகளை ஏற்படுத்த பாகிஸ்தான் முயற்சி! வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரி

பட்டாசுகள் வெடிக்கவோ, ட்ரோன்களை பறக்கவிடவோ கூடாது: அதிரடி அறிவிப்பு..!

எதையும் செய்ய தயங்க மாட்டோம்.. ஆபரேசன் சிந்தூர் குறித்து முகேஷ் அம்பானி..!

அடுத்த கட்டுரையில்
Show comments