Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமுதா, ராதாகிருஷ்ணன் உள்பட ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. முழு விவரங்கள்..!

Siva
செவ்வாய், 16 ஜூலை 2024 (14:27 IST)
நிர்வாக வசதிக்காகவும் வேறு சில காரணங்களுக்காகவும் அவ்வப்போது ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வரும் நிலையில் தற்போது ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் மற்றும் அமுதா ஐஏஎஸ் உட்பட 10 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. இது குறித்த முழு விவரங்கள் இதோ:
 
தமிழக உள்துறை செயலாளர் அமுதா ஐஏஎஸ், வருவாய் மற்றும் பேரிடர் துறைக்கு மாற்றம் 
 
சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், உணவுத்துறை செயலாளராக மாற்றம் 
 
சென்னை மாநகராட்சியின் ஆணையராக குமரகுருபரன் நியமிக்கப்பட்டுள்ளார். 
 
தமிழக புதிய உள்துறைச் செயலாளராக தீரச் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 
மீன்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளராக கோபால் மாற்றம்  
 
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை செயலாளராக வீரராகவர் ராவ் மாற்றம் 
 
சிட்கோ இயக்குனராக செயல்பட்டு வந்த மதிமிதா பள்ளிக்கல்வித்துறை செயலாளராக மாற்றம் 
 
உணவு உணவுத்துறை செயலாளராக இருந்த கோபால், கால்நடைத்துறை மீன்வளத்துறை செயலாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 
 
அரியலூர் மாவட்ட ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்ணா மாற்றம் 
 
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியராக சந்திரகலா நியமனம் 
 
ராமநாதபுரம், ராணிப்பேட்டை, அரியலூர், நீலகிரி, கடலூர், குமாரி ஆகிய மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர்களும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
 
நீலகிரி மாவட்ட ஆட்சியராக அருணா மாற்றப்பட்டு, புதிய மாவட்ட ஆட்சியராக லட்சுமி பவ்யா நியமனம்  
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்தல் வியூக மன்னன் பிரசாந்த் கிஷோர் கைது.. பீகார் போலீசார் அதிரடி..!

சென்னை பேருந்துகளில் சிங்காரச் சென்னை ஸ்மார்ட் அட்டை திட்டம்: தொடங்கும் நாள் அறிவிப்பு..!

மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டி.. நாளை முதல் முன்பதிவு தொடக்கம்..!

பிரியங்கா காந்தி கன்னம் போல சாலை அமைப்பேன்: பாஜக வேட்பாளர் சர்ச்சை பேச்சு..!

திருமணமாகாதவர்கள் தங்க அனுமதி இல்லை: ஓயோ அதிரடி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments