Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எனக்கு டைரி எழுதும் பழக்கமே இல்லை: சேகர் ரெட்டி

Webdunia
வெள்ளி, 8 டிசம்பர் 2017 (18:05 IST)
பிரபல ஆங்கில சேனல் டைம்ஸ் நெள, சேகர் ரெட்டியின் டைரி என்ற ஒரு ஆதாரத்தை இன்று வெளியிட்டது. இதில் ஓபிஎஸ் உள்பட அமைச்சர்களுக்கு பணம் கொடுத்ததாக குறிப்பிட்டுள்ளதால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த டைரி குறித்து சேகர் ரெட்டி தற்போது விளக்கம் அளித்துள்ளார். நான் யாருக்கும் பணம் ஏதும் தரவில்லை; பிறருக்கு பணத்தை தர வேண்டிய அவசியமும் இல்லை.  வருமான வரி சோதனையில் கைப்பற்றப்பட்ட பணம் என்னுடைய தொழில்களில் இருந்து வந்தவையே. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை திருப்பதி உட்பட 2 இடங்களில் மட்டுமே பார்த்துள்ளேன்

எனக்கு டைரி எழுதும் பழக்கமே இல்லை டைரியில் உள்ளது யார் எழுதியது என்பது தெரியவில்லை, அது எனது கையெழுத்து இல்லை. வருமான வரித்துறை அதிகாரிகள் என்னுடைய வீட்டில் இருந்து எந்த ஒரு டைரியையும் கைப்பற்றவில்லை. நாடு முழுவதும் நாங்கள் நேர்மையான முறையில் தொழில் செய்து வருகிறோம், அனைத்துக்கும் முறையான கணக்கு உள்ளது. மேலும் வருமான வரி முறையாக செலுத்தி வருகிறோம்' என்று கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பீகாரில் மாறுகிறதா அரசியல் நிலவரம்? நிதிஷ்குமார் - லாலு பிரசாத் யாதவ் கூட்டணி?

கரும்பு டன்னுக்கு ரூ.950 குறைப்பு.. வயிற்றில் அடிப்பதுதான் திராவிட மாடலா? - பாமக ராமதாஸ் காட்டம்!

டிஎன்பிஎஸ்சி குரூப் 2: கணினி வழி தேர்வு ரத்து: ஓ.எம்.ஆர் முறையில் தேர்வு நடத்த திட்டம்..!

அண்ணா பல்கலை மாணவி வன்கொடுமை: தாமாக முன்வந்து உயர்நீதிமன்றம் விசாரணை..!

அஜர்பைஜான் விமானத்தை தாக்கியது ரஷ்ய ஏவுகணையா? - ரஷ்யா அளித்த விளக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments