Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஜெயலலிதா நர்ஸ் கையை பிடித்து நடந்த போட்டோ என்னிடம் தான் உள்ளது: சசி. உத்தரவுக்கு காத்திருக்கும் புகழேந்தி!

ஜெயலலிதா நர்ஸ் கையை பிடித்து நடந்த போட்டோ என்னிடம் தான் உள்ளது: சசி. உத்தரவுக்கு காத்திருக்கும் புகழேந்தி!

Advertiesment
ஜெயலலிதா நர்ஸ் கையை பிடித்து நடந்த போட்டோ என்னிடம் தான் உள்ளது: சசி. உத்தரவுக்கு காத்திருக்கும் புகழேந்தி!
, புதன், 24 மே 2017 (12:02 IST)
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் நர்சுகளின் கைப்பிடித்து நடந்த போட்டோக்கள் இருப்பதாக மீண்டும் கூறியுள்ளார் தினகரன் ஆதரவு கர்நாடக மாநில அதிமுக செயலாளர் புகழேந்தி.


File Photo
 


அதிமுக அமைச்சர்கள் ஒன்றுகூடி ஆலோசனை செய்து ஊடகத்தை சந்தித்து தினகரன் மற்றும் அவரது குடும்பத்தை கட்சியில் இருந்து ஒதுக்கி வைப்பதாகவும் அவரது தலையீடு இனிமேல் இருக்காது எனவும் கூறினார். தினகரனும் அதனை பக்குவமாக ஏற்றுக்கொண்டு ஒதுங்கி இருக்கிறேன் என கூறினர்.
 
அதன் பின்னர் இரட்டை இலை சின்னத்துக்காக தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைதாகி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஆனாலும் அவரது தீவிர ஆதரவாளர்களான நாஞ்சில் சம்பத் மற்றும் புகழேந்தி ஆகியோர் தினகரனுக்கு ஆதரவாக பேசி வருகின்றனர்.
 
தினகரனுக்கு ஆதரவாக நாஞ்சில் சம்பத் மற்றும் புகழேந்தி ஆகியோர் தமிழகம் முழுவதும் பொதுக்கூட்டங்கள் நடத்தி வருகின்றனர். நேற்று தஞ்சை மண்ணில் இந்த பொதுக்கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர்.
 
இந்த கூட்டத்தில் பேசிய புகழேந்தி, அப்போலோவில் ஜெயலலிதா நர்சுகளின் கையை பிடித்துக்கொண்டு நடந்த போட்டோக்கள் என்னிடம்தான் உள்ளன. என் கையில்தான் அந்த போட்டோக்கள் இருக்கின்றன என்றார். மேலும் சின்னம்மா உத்தரவு கொடுத்ததும் அவற்றை வெளியிடுவேன் என்று குறிப்பிட்டார்.
 
அப்போது கூட்டத்தில் இருந்த சிலர் இப்போதே அதனை வெளியிடங்கள் என கூறினர். ஆனால் அதனை கண்டுகொள்ளாமல் தொடர்ந்து தனது உரையை நிகழ்த்தின்னார். முன்னதாக ஜெயலலிதாவின் மருத்துவமனை போட்டோக்களை வெளியிடுவேன் என்று பேசியிருந்தார் புகழேந்தி.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வைகோ சிறையில் இருந்தால் தேவையில்லாத செலவு - அசிங்கப்படுத்திய அரசு